வலிப்பு நோய் உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை ? : வலிப்பு நோயா ? : பாகம் 3

வலிப்பு நோயா ? : பாகம் 3 : வலிப்பு நோய் உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை ?
++++++++++++++++++++++++++++++++

வீட்டில்
********

1. மாத்திரைகளை தொடர்ந்து ஒழுங்காக சாப்பிட வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளை மாற்றுவதோ, அல்லது குறைப்பதோ கூடாது. போதுமான அளவு மாத்திரைகளை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். மாத்திரை தீரும் வரை காத்திருக்காமல், 4 நாட்களுக்கு முன்னரே வாங்கிவிட வேண்டும்.

2. சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை இருந்தால், அந்த நோய்களுக்கான சிகிச்சையை முறையாக எடுக்க வேண்டும். சிறிது கூட தாமதிக்கக்கூடாது. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றிற்கு சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தால், உணவுக்கட்டுப்பாடு தேவை. தங்களின் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், குடும்ப மருத்துவர் ஆகியோரின் ஆலோசனைகளை கடைபிடிக்கவும்

3. வேறு எந்த நோயும் இல்லாதவர்கள் கூட அதிக அளவு சர்க்கரை, மாவுச்சத்து ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்

4. ஒரு சிறு காகிதத்தில் தங்களின் பெயர், வலிப்பு நோயின் சரியான பெயர், எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் பெயர், குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண், குடும்ப மருத்துவரின் பெயர் மற்றும் எண் ஆகியவற்றை எழுதி (அல்லது தட்டச்சு செய்து) அதை ஒரு கண்ணாடிஉறைக்குள் (அல்லது லேமினேட் செய்து) சட்டைப்பையில் வைத்துக்கொள்ளவும்

வலிப்பு நோய் உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை ?
வலிப்பு நோய் உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை ?

5. தினமும் குளிக்கவும். தலைக்கு குளிக்கலாம்.
ஷவரில் குளிக்கலாம். அல்லது வாளியில் நீர் பிடித்து குளிக்கலாம்
குளியல் தொட்டியில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
குளியலறை/ கழிப்பறை கதவினை சாத்தவும், ஆனால் உள்ளிருந்து தாழ்ப்பாள் போடக்கூடாது.

6. குளியலறைக்குள் (அல்லது நீருக்கு அருகில்) மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம். வலிப்பு ஏற்பட்டால் இவை நீருக்குள் விழுந்தால் மின் அதிர்ச்சி ஏற்பட (ஷாக் அடிக்க) வாய்ப்பு உள்ளது

7. அறைக்குள் தனியாக இருக்கும் போது உட்புறம் தாழ்ப்பாள் போடக்கூடாது. இரு பக்கமும் திறக்கும் பூட்டுகளையே வீட்டில் பயன்படுத்தவும்

8. கண் கண்ணாடி அணிபவராக இருந்தால் உங்கள் லென்ஸ்களை உடையாத லென்ஸ்களாக மாற்றுங்கள்

9. வீட்டினுள் முடிந்த அளவு கண்ணாடிகளை தவிர்த்து விட்டு, ப்ளாஸ்டிக் போன்ற உடையாத பொருட்களை பயன்படுத்த வேண்டும்
உதாரனமாக : கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தக்கூடாது. வலிப்பின் போது இவை உடைந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தலாம்

10. சமையல் செய்யும் போது, பாத்திரங்களில் கைப்பிடி, சுவற்றை நோக்கி இருக்கும்படி வைத்துக்கொள்ளவும். ஒருவேலை வலிப்பு ஏற்பட்டால் கூட, உங்கள் கை அந்த கைப்பிடியில் பட்டு, கொதிக்கும் குழம்பு உங்கள் மேல் விழும் வாய்ப்பை அளிக்கக்கூடாது
அலுவலகத்தில்
*****************

11. உங்கள் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலதிகாரிகள் ஆகியோருக்கு இதை தெரியப்படுத்துங்கள். 4ஆம் கருத்தில் கூறிய காகிதத்தின் ஒரு நகலை அவர்களுக்கு அளிப்பது சிறந்தது

12. கூர்மையான கருவிகள் பயன்படுத்தக்கூடாது

வெளியில் செல்லும் போது
*****************************

13. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது

14. ஏரி, குளம், கிணறு, அருவி ஆகியவற்றினுள் தனியாக செல்லக்கூடாது. நீச்சல் தெரிந்த நபர்கள் அருகில் இருந்தால் மட்டுமே நீர் நிலைகளுக்குள் செல்ல வேண்டும்பொதுவாக
************

15. ஒரு நாட்குறிப்பேட்டில் (அல்லது கூகிள் காலெண்டரில்) வலிப்பு ஏற்படும் தேதி, நேரம் ஆகியவற்றை குறித்து வைத்துக்கொள்ளவும்

16. ஒழுங்கான தூக்கம் வேண்டும். முறையான நேரத்தில் தூங்க செல்வது நலம்.

17. வலிப்பு அறிகுறியை தோற்றுவிக்கும் காரணிகளை முடிந்தவரை தவிர்க்கவேண்டும். சிலருக்கு தூங்காவிட்டால் வலிப்பு வரும். அவர்கள் முறையாக தூங்க வேண்டும். சிலருக்கு விளக்கும் பளிச்சிட்டால் வலிப்பு வரும். அவர்கள் அது போல் பளிச்சிடும் விளக்குகளை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்

18. வலிப்பு ஏற்பட்டாலோ அல்லது தலைவலி, பார்வை இரண்டாக தெரிவது, வாந்தி ஆகியவை ஏற்பட்டாலோ உடனடியாக 108 அழைத்து மருத்துவமனைக்கு வரவும்

-oOo-

இந்த கட்டுரை பலருக்கும் பயன்பட இதை உங்கள் பக்கத்தில் மற்றும் குழுக்களில் பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் சந்தேகங்களை மறுமொழியில் கேளுங்கள்

-oOo-

முதுகுவலி, எடை குறைப்பு, தலைவலி, கைகால்வலிப்பு (காக்காவலிப்பு) குறித்த தகவல்களை தொடர்ந்து வாசிக்க, இந்த பக்கத்தை விரும்பவும் (லைக் செய்யவும்)ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ? : வலிப்பு நோயா ? : பாகம் 2

வலிப்பு நோயா ? : பாகம் 2
*****************************
ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ? கை கால் வலிப்பு (காக்காவலிப்பு) ஏற்பட்டால் மட்டும் தான் அது வலிப்பு நோயா ?

-oOo-

வலிப்பு நோய் குறித்து மேலும் அறிந்து கொள்வதற்கு முன்னர்,
1. நோய் (Disease) அல்லது பிணி
2. நோய்குறி (Symptom / Sign)
3. நோய்குழு (Group of Diseases)
4. நோய்வீச்சு (Spectrum of Symptoms of a Disease)

ஆகிய பதங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்

-oOo-நோய் என்றால் என்ன ? மனித உடல் தனது இயல்பான செயல்பாட்டினை இழப்பதே நோய் அல்லது பிணி ஆகும்

இப்படி இயல்பான செயல்பாட்டினை இழக்கும் போது உடலில் பல மாற்றங்கள் தோன்றுகின்றன. இவையே நோய்குறி

ஒரு நோய்க்கு பல நோய்க்குறிகள் இருக்கும்.
அதே போல் ஒரு நோய்க்குறி பல நோய்களுக்கு இருக்கும்

நோய்வீச்சு (Spectrum of Symptoms of a Disease) என்றால் என்ன ? ஒரு நோயில் சில நோய்குறிகள் பிரதானமாக இருக்கும். ஆனால் அது தவிர பல நோய்குறிகளும் இருக்கும். இவை அனைத்து சேர்ந்தது ஒரு நோய்வீச்சு

அப்படி என்றால் நோய்குழு (Group of diseases) என்றால் என்ன ?
ஒரு நோய்குறி உள்ள பல நோய்கள் நோய்குழு என்று அழைக்கப்படுகின்றன

-oOo-

உதாரணமாக

ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ?
ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ?

மலேரியா (Malaria) என்பது நோய் (Disease)
இதன் முக்கிய நோய்குறி (Sign) காய்ச்சல் (Fever)
மலேரியா நோய் வீச்சு (Spectrum of Malaria) என்றா; காய்ச்சல் தவிர இரத்தத்தில் அணுக்கள் உடைவது, ஈரல், மண்ணீரல் பெரிதாவது என்று பலவும் இருக்கும்
காய்ச்சல் நோய்குழுவில் (Fever Group of Diseases) காய்ச்சல் பிரதானமாக உள்ள பிற நோய்களும் இருக்கும். உதாரணமாக – டைப்பாயிடு

-oOo-

கைகால் வலிப்பு (fits) என்பது ஒரு நோய் (disease) அல்ல.
அது ஒரு நோய்க்குறி (sign). மூளைக்குள் மின் இணைப்புகள் அல்லது வேதிபொருட்களில் ஏற்பட்ட பிரச்சனையினால் கைகால் தசைகள் முறையாக சுருங்கி விரியாமல் தாறுமாறாக சுருங்கி விரியும். இதுவே கை கால் வலிப்பு எனப்படுகிறது

இந்த கை கால் வலிப்பு ஏற்படக்காரணமான பிரச்சனை ஒன்று இருக்கும் அல்லவா. அது தான் நோய் (disease)

பல நோய்களில் கைகால் வலிப்பு அறிகுறி வரலாம் அல்லவா, அவை எல்லாம் சேர்ந்து தான் வலிப்பு நோய் (Epilepsy)

Epilepsy is a group of neurological diseases characterized by epileptic seizures. அதாவது வலிப்பு அறிகுறி ஏற்படும் அனைத்து நோய்களும் சேர்ந்த நோய்குழுதான் வலிப்பு நோய்கள்

-oOo-இதில் முக்கியமான விஷயம்

வலிப்பு அறிகுறி என்பது வேறு (அது நோய்குறி) Fits or Seizures is a Sign
வலிப்பு நோய் என்பது வேறு (அது நோய்)
வலிப்பு நோய்கள் என்பது வேறு (அது நோய்க்குழு) Epilepsy is a disease group

வலிப்பு அறிகுறி என்பது பல காரணங்களினால் ஏற்படலாம்.
அந்த காரணங்களில் சில காரணங்கள் வலிப்பு நோய்கள்
Fits can occur due to various reasons. Epilepsy is one of them

வலிப்பு நோயில் பல நோய்குறிகள் அல்லது பாதிப்புகள் ஏற்படலாம்.
அந்த பல பாதிப்புகள் அல்லது நோய்குறிகளில் ஒன்று வலிப்பு அறிகுறி
Epilepsy can have various signs and Symptoms. Fits is one of them

அதே போல்

வலிப்பு அறிகுறி ஏற்படாத வலிப்பு நோய்களும் உள்ளன
Many diseases in epilepsy may not present with Fits

வலிப்பு நோய்கள் தவிர பல நோய்களிலும் வலிப்பு அறிகுறி ஏற்படலாம்
Fits can occur is conditions other than epilepsy

-oOo-இதை திரும்ப திரும்ப கூறுவதன் நோக்கம் என்னவென்றால்

நமது மக்களில் பெரும்பாண்மையானவர்களுக்கு

நோய்க்கும்
நோய்குறிக்கும் வித்தியாசம் தெரியாது

எந்த காரணத்தினால் வலிப்பு அறிகுறி ஏற்பட்டாலும் அவை அனைத்தும் ஒரே மருந்தினால் சரியாகிவிடும் என்ற தவறான எண்ணம் பலருக்கும் உள்ளது

-oOo-

இப்பொழுது நாம் முதலில் பார்த்த மூன்றூ கேள்விகளுக்கும் விடை காணலாம்

1
ஒரு முறை வலிப்பு அறிகுறி வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ?

இல்லை !
அப்படி அவசியம் இல்லை

வலிப்பு அறிகுறி எந்த காரணத்தினால், எந்த நோயினால் வந்தது என்பதை கண்டு பிடித்து அது வலிப்பு நோயினால் வந்ததா, அல்லது பிற காரணங்களினால் வந்ததா என்று பார்க்க வேண்டும்

பிற காரணங்களினால் வந்தது என்றால்
அதாவது
வேறு நோய்களினால் வந்தது என்றால்
அந்த நோய்க்குரிய சிகிச்சை எடுத்தாலே போதும். வலிப்பு அறிகுறி அதன் பிறகு வராது

2
கை கால் வலிப்பு (காக்காவலிப்பு) ஏற்பட்டால் மட்டும் தான் அது வலிப்பு நோயா ?
இல்லை !
கை கால் வலிப்பு ஏற்படாமல் கூட வலிப்பு நோயின் பிற பாதிப்புகள் இருக்கலாம்

-oOo-

வலிப்பு நோயின் பிற நோய்குறிகள் யாவை ?

தொடர்ந்து பார்ப்போம்

கால் கை வலிப்பு (காக்காவலிப்பு) எப்படி ஏற்படுகிறது ? வலிப்பு நோயா ? : பாகம் 1

வலிப்பு நோயா ? : பாகம் 1
*****************************
கால் கை வலிப்பு (காக்காவலிப்பு) எப்படி ஏற்படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் இந்த கட்டுரை விளக்குகிறது.

++++++++++++++++++++++

இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கிறீர்கள்; உங்கள் திரையில் எழுத்துக்களும் படங்களும் தெரிகின்றன என்றால் என்ன அர்த்தம் –> உங்கள் அலைபேசி (அல்லது மடிக்கணினி அல்லது மேசைக்கணினி) ஒழுங்காக வேலை செய்கிறது என்று அர்த்தம்

ஒருவேளை

கால் கை வலிப்பு (காக்காவலிப்பு) எப்படி ஏற்படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் இந்த கட்டுரை விளக்குகிறது.
கால் கை வலிப்பு (காக்காவலிப்பு) எப்படி ஏற்படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் இந்த கட்டுரை விளக்குகிறது.

உங்கள் அலைபேசி (அல்லது மடிக்கணினி அல்லது மேசைக்கணினி) ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்
ஒன்று கணினியின் மையச் செயற்பகுதியில் (CPU) ஏதோ பிரச்சனை அல்லது மையச்செயற்பகுதியில் இருந்து வரும் கம்பியில் கோளாறு அல்லது மின் இணைப்புகலில் தகராறு அல்லது திரையில் பிழை இருந்தால் என்ன நடக்கும்
எழுத்துக்களும் படங்களும் தெளிவில்லாமல் இருக்கும் . . .
சிறு பிழை என்றால் சிறிது தெளிவில்லாமல் இருக்கும். அதேநேரம்
பிரச்சனை, கோளாறு, தகராறு, பிழை அதிகம் இருந்தால், திரையில் தெரிவதை வைத்து ஒன்றுமே அறிந்து கொள்ள முடியாது

-oOo-கணினியில் விசைப்பலகை, எலி போன்ற கருவிகளின் மூலம் செய்தி உள்ளே செல்கிறது

அதே போல் நமது உடம்பில் புலன்களின் மூலம் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) செய்தி உள்ளே செல்கிறது

கணினியின் மையச் செயற்பகுதியில் இந்த செய்திகள் உள்வாங்கப்பட்டு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது
அதே போல் நமது மூளையில் இந்த செய்திகள் உள்வாங்கப்பட்டு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது
கணினியில் இருந்து வரும் கட்டளைகள் திரையில் தெரிகின்றன, அல்லது அச்சுபொறியின் மூலம் அச்சடிக்கப்படுகின்றன
மூளையில் இருந்து வரும் கட்டளைகள் மூலம் தசைகள் இயக்கப்படுகின்றன, அல்லது பிற செயல்கள் நடக்கின்றன

-oOo-

அலைபேசி அல்லது கணினி ஒழுங்காக வேலை செய்தால் திரையில் படம் முறையாக தெரியும்

மூளை ஒழுங்காக வேலை செய்தால் கை கால் தசைகள் செய்ய வேண்டிய வேலைக்கு ஏற்றாற்போல் சுருங்கி விரியும்

-oOo-

அலைபேசி அல்லது கணினியின் மின்னினைப்புகளில் பிரச்சனை என்றால் திரையில் படம் முறையற்று தெரியும்

மூளையின் மின் இணைப்புகளில் அல்லது வேதிபொருட்களில் பிரச்சனை என்றால் கைகால் தசைகள் முறையாக சுருங்கி விரியாமல் தாறுமாறாக சுருங்கி விரியும். இதுவே கை கால் வலிப்பு எனப்படுகிறது
கால் கை வலிப்பு என்பது மருவி, காக்காய் வலிப்பு என்று மாறி விட்டது

-oOo-

மூளையின் மின் இணைப்புகளில் ஏன் பிரச்சனை வருகிறது ?
மூளையின் வேதிபொருட்களில் ஏன் பிரச்சனை வருகிறது ?
இந்த பிரச்சனைகளால் கை கால் வலிப்பு தவிர வேறு என்ன பாதிப்புகள் ஏற்படலாம் ?
இவற்றை எப்படி சரி செய்ய வேண்டும் ?
தொடர்ந்து பார்க்கலாம்

-oOo-இந்த கட்டுரை பலருக்கும் பயன்பட இதை உங்கள் பக்கத்தில் மற்றும் குழுக்களில் பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் சந்தேகங்களை மறுமொழியில் கேளுங்கள்