Ma Tholkappiyanனின் ‘லியோ’ – காட்சிமா விமர்சனமும் போலி ஏமாற்று சித்த மருத்துவமும்

முகநூலில் Ma Tholkappiyan ஒரு சினிமா பதிவு எழுதியிருந்தார். பதிவு இங்குள்ளது

Ma Tholkappiyanனின் ‘லியோ’ – காட்சிமா விமர்சனமும் போலி ஏமாற்று சித்த மருத்துவமும்

அதை சற்றே மாற்றியதில் கீழ்க்கண்ட பதிவு கிடைத்தது. . .

லியோ’ – காட்சிமா விமர்சனம்
“”””””””””””””””””””””””””””
எப்போதெல்லாம் ஒருவர் திடீரென புகழப்படுகிறாரோ அவர் ஒரு போலி என்று கண்டுகொள்க.
எப்போதெல்லாம் ஒரு போலி, ஊடகங்களாலும், பெரும் பணம் படைத்தவர்களாலும், பெரும்பான்மையான சாமானியர்களாலும் கொண்டாடப்படுகிறாரோ அப்போது அவர் ஒரு மாஃபியா ஆகிறார் என்பதை அறிக
இத்தகைய மாஃபியாவாக உருவாக்கப்பட்டவர்தான் லோகேஷ் கனகராஜ்.  ஏ“மாற்று” சித்த மருத்துவர்

ஓர் அறிவுஜீவியை யாராலும் உருவாக்கமுடியாது; ஒரு காட்சிமா கலைஞனை யாராலும் உருவாக்க முடியாது; ஒரு ஆற்றல் மிக்க கலைஞனை யாராலும் எப்போதும் உருவாக்க முடியாது.

ஆனால், ஒரு முட்டாளை மூளைக்காரனாக காட்ட ஒரு தயாரிப்பு ஊடக நிறுவனம் வந்து நிற்கும்; ஒரு போலியை அசலாகக் காட்ட ஒரு நாயக நடிகன் முன் வருவான்; ஒரு அறிவிலியை அறிவாளியாகக் காட்ட ஊடகங்கள் ஓடி வரும்.

அவ்வாறு ஊதிப் பெருக்கப்பட்ட முட்டாள்தான் கில்லாடிதான் லோகேஷ் கனகராஜ். ஏ“மாற்று” சித்த மருத்துவர்
பணம் பிடுங்குவதே மாஃபியாக்களின் ஒரே நோக்கம். பெரும் பணம் பிடுங்க வேண்டும்.

நியாயம் அநியாயம், நேர்மை நீதி, மானம் மனிதாபிமானம், சூடு சொரணை, இரக்கம் கழிவிரக்கம் எவை குறித்தும் கவலைப் படாமல், மக்களை ஏமாற்றி தியேட்டரை ஏ“மாற்று” சித்த மருத்துவத்தை  நோக்கி அவர்களை இழுத்து வரும் திறமை ஒருவனிடம் இருப்பதாகக் கண்டு பிடித்துவிட்டால், அப்போது அவன்தான் மாஃபியா எனும் அந்தஸ்த்தை பிடிக்கிறான்.

போலி சித்த மருந்து தயாரிப்பாளனுக்கும், நடிகனுக்கும் அதை வைத்து டெண்டர் எடுப்பவருக்கும் பெரும் பணத்தை ஈட்டித் தரும் மாஃபியாதான் லோகேஷ் கனகராஜ். ஏ“மாற்று” சித்த மருத்துவர்

பெரும் பணத்தை மக்களிடமிருந்து கரப்பதால் மட்டுமே ஒருவன் மாஃபியா ஆகிவிடுவது இல்லை. அவன் கல்நெஞ்சக்காரனாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் உண்மையான மாஃபியா ஆக முடியும்.

அதாவது, மக்களை ஏமாற்றி, எத்தகைய சில்லரை வழிகளிலேனும் அவர்களின் ஆசையைத் தூண்டி, அவர்களிடம் இருந்து பணத்தை கரக்கும் ஒரு மாஃபியா, அந்த மக்களுக்கு என்ன கொடுத்தோம் என்று கிஞ்சித்தும் யோசிக்கக் கூடாது. அப்படி யோசிக்காததனால்தான் அவன் மாஃபியா என்று பெருமையாக கொண்டாடப்படுகிறான்.

மக்களின் நேரத்தை அபகரிக்க வேண்டும்; மக்களின் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும்; கூடுதலாக, மக்களின் மன நிலையை சிதைக்க வேண்டும். இதுதான் மாஃபியாவின் அடிப்படை வேலைத் திட்டம்.

ஒரு காட்சிமா இயக்குநர் ஏ“மாற்று” சித்த மருத்துவர்  ஒரு புகழ்பெற்ற மாஃபியாவாக திகழ வேண்டுமானால், அவரிடம் இருக்க வேண்டிய தகுதிகள்,
1.அவனுக்கு கதை மருத்துவம் குறித்த அறிவு இருக்கக் கூடாது.
2.அவனுக்கு பாத்திர வடிவமைப்புப் உடலியங்கியல் பற்றிய அடிப்படைப் புரிதல் தெரியக் கூடாது.
3.காட்சியம்(screenplay) பக்கவிளைவுகள் பற்றிய அறிவோ தெளிவோ கூடவே கூடாது.
4.லாஜிக்கல் பற்றிய கவலையே அவனுக்கு இருக்கக் கூடாது.
ஆனால், முக்கியமான ஒரு புரிதல் அவனுக்கு நிச்சயம் இருக்க வேண்டும். அதாவது,
5.இளைய சமூகத்திடம் இருக்கும் அறியாமைகளையும், மூட நம்பிக்கைகளையும் நன்றாகப் புரிந்து வைத்து இருக்க வேண்டும்.
இந்த ஐந்து அம்சங்களையும் கொண்டிருப்பவன் இந்தச் சமூகத்தின் மரண மாஃபியா ஆகிறான்.

பெரிய பிஸ்தா என்று போற்றப்படுகிற இந்த சினிமா சித்த மாஃபியாவிடம் சொந்தமாக ஒரு கதை மருந்து கூட இல்லை என்று நினைக்கும்போது என்ன சொல்ல!

The History of Violence எனும் ஆங்கிலப்படத்தை டெங்கு, டயாபடிஸ், கோவிட், ஏய்ட்ஸ் ஆகியவற்றிற்கு நவீன அறிவியலின் அடிப்படையில் உள்ள பரிசோதனைகளை அப்படியே தனது முதல் பாதியில் பயன்படுத்தி இருக்கிறான், இந்த மாஃபியா. ஏண்டா அடுத்தவன் பெத்த குழந்தைக்கு எப்டிடா உன்னோட பேற போட்டுக்கிற? கொஞ்சனாச்சும் வெக்கம் மானம், சூடு சொரணை இருக்காடா….? கொஞ்சனாச்சும் முயற்சி பண்ன மாட்டியாடா? ஊரு பணத்தை கொள்ளையடிக்கிறதுல ஒனக்கு கண்ணமுன்ன தெரியாத ஆர்வமாடா?
சமூகம் எப்போதுமே திறமைசாலிகளை கண்டுகொள்வது இல்லை. கண்டுகொண்டாலும் அவர்களுக்கு எளிதில் வரவேற்பு கொடுப்பது இல்லை. ஆனால் எதிர்திறனாலிகள்(inabilitants) உடனடி வரவேற்பை பெற்று விடுகின்றனர்.
யார் இவர்களுக்கு வரவேற்பு கொடுப்பது?
லாஜிக் அறிவியல் பற்றி நாம் பேசினால்,,, //சார் லாஜிக்கெல்லாம் அறிவியலெல்லாம் பாத்தா படம் எடுக்கவே வைத்தியம் பார்க்கவே முடியாதுங்க//… என்று நம்மை மறுதலிக்கிறார்கள் பாருங்கள் அவர்கள்தான் போலிகளுக்கு வணக்கமும் வந்தனமும் செய்பவர்கள். வேறு யாருமல்ல.

சமீபத்தில் ஒரு படம்… ‘இருகப்பற்று’
இந்தப் படத்தில் வரும் ஏதேனும் ஒரு காட்சி பார்வையாளனுக்கு பயன் அளிப்பதைப்போல, ‘லியோ’ என்கிற முழுபடத்தாலும் கொடுக்க முடியாது.
அதாவது,
மாஃபியாக்களால் சாமானியனுக்கு ஒரு பொடலங்காய்கூட வேகாது!

ஏமாற்றுக்காரர்களின் சூழ்ச்சிகளில் எனது தமிழ் மக்கள் எளிதில் சுருண்டு விடுகிறார்களே என்று நினைக்கும்போதுதான் இந்த மாஃபியாக்கள் மீது சகித்துக்கொள்ள முடியாத ஆத்திரம் வருகிறது.

என்ன செய்ய! வாய்ப்புக்காகக் காத்திருப்பதைத்தவிர எனக்கு வேறு வழியே இல்லை
ம.தொல்காப்பியன்.

நோயாளியின் நலனே முக்கியம்


சித்த மருத்துவத்தால் உயிரை காக்க முடியாது
எந்த நோயையும் குணப்படுத்த முடியாது
நவீன மருத்துவம் மட்டுமே உயிர் காக்கும்
என்பதால் நவீன மருத்துவத்தை பயன்படுத்துகிறார்கள்

இதில் என்ன பிழை

நோயாளி நலம் பெற வேண்டும் என்பது தானே முக்கியம்
எந்த முறை என்பதா முக்கியம் ?
சித்த மருத்துவக்கல்லூரிகளிலும் நவீன மருத்துவத்தை சொல்லி கொடுப்பதன் மூலம் இதற்கு எளிய தீர்வு உண்டே

வைத்தியம் பார்ப்பது நவீன மருந்துகளை வைத்து என்றால்
ஏன் சித்த மருத்துவக்கல்லூரி நமக்கு தேவை ?
அடுத்த மாதம் திறக்கும் 11 கல்லூரிகளுடன் சித்த கல்லூரிகளையும் நவீன மருத்துவக்கல்லூரிகளாக மாற்றலாமே