If People like Periyar Anna Kalaignar Kalki kannadasan had the knack of conveying any complex issue with very common and simple words
Vairamuthu probably is the best person who uses appropriate words that are technically, historically as well as culturally accurate
-oOo-
எந்த வாசல் வழி காதல் நடந்துவரும்
என்று காத்துக்கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து
கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து என்னை அணைத்தபோது
எந்தன் சல்லிவேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லைவரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்
துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பின் ஆதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
சட்டென நனைந்தது நெஞ்சம்
சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்
உடலுக்குள் மல்லிகைத் தூறல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
-oOo-
The word that caught my attention here is சல்லி வேர்
Tap root is ஆணி வேர், Fibrous root is சல்லி வேர்
Tap root mostly seen in dicot (dicotyledon) plants like pulses, legumes
Fibrous root seen in monocot (monocotyledon) plants like cereals eg Paddy
Mostly monocot plants are the ones which are relocated in the process of agricultural cultivation – நாத்து நடுதல்
Until recently (till we had modern technology of transferring the trees using a conical excavator) It was not possible to uproot a dicot plant and plant it elsewhere
Mostly it will die because We will break the tap root
But Monocot can be planted else where. And it is the norm too
If he has written வேர் அறுந்தேன், That means permanent damage. The next line மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன் becomes meaningless
But
The use of specific word for fibrous root சல்லி வேர் gives meaning to the next line மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்
-oOo
Quiz : ARR has used the same tune சட்டென நனைந்தது நெஞ்சம், சர்க்கரையானது கண்ணீர், இன்பம் இன்பம் ஒரு துன்பம், துன்பம் எத்தனை பேரின்பம் in another song. Can you recognise
முதலில் வரலாறில் உள்ளவை
அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற ஊகம்
இறுதியில் கல்கி என்ன சொல்லியுள்ளார்
என்று பார்போம்
–
(I) வரலாறு
இடைக்காலச்சோழர்களின் காலம் விஜயாலய சோழரில் இருந்து துவங்குகிறது. விஜயாலய சோழர் 848ல் இருந்து 870 வரை ஆள்கிறார். அவருக்கு பிறகு அவரது மகன் ஆதித்ய சோழர் (இவர் தான் ஆதித்ய சோழன் I) I 871 முதல் 907 வரை அரசாள்கிறார். ஆதித்திய சோழரின் மகன் பராந்தக சோழர். இவர் 907 முதல் 955 வரை 48 ஆண்டுகள் அரசராக உள்ளார்.
பராந்தக சோழருக்கு மூன்று மகன்கள்
ராஜாதித்ய சோழன்
கண்டராதித்ய சோழன்
அரிஞ்சய சோழன்
-oOo-
இதில் ராஜாதித்ய சோழர் தான் பட்டத்து இளவரசர். ஆனால் தக்கோலப்போரில் 1948லேயே இறந்துவிட்டார் (இன்று அரக்கோணம் அருகில் இருக்கும் சிறு ஊர் தக்கோலம்). போரில் யானை மேல் இருக்கும் போது கொல்லப்பட்டதால் இவருக்கு யானை மேல் துஞ்சிய தேவர் என்று பெயர்.
பராந்தக சோழரின் இரண்டாவது மகனான கண்டராதித்ய சோழரின் மனைவி செம்பியன் மாதேவி (இவர் மலவரையர் என்ற சிற்றரசரின் மகள்). இவர்களுக்கு மதுராந்தக உத்தம சோழன் என்று ஒரு மகன் உள்ளார். ஆனால் அவர் வயதில் இளையவர். அனேகமாக கண்டராதித்யரின் முதுமையில் பிறந்திருக்கவேண்டும்.
பராந்தக சோழரின் மூன்றாவது மகனான அரிஞ்சய சோழனின் மனைவி கல்யானி கர்நூலை சேர்ந்தவர். இவர்களின் மகன் பராந்தக சோழன் -II அல்லது சுந்தர சோழன் அல்லது பராந்தக சுந்தர சோழன்.
சுந்தர சோழனின் மனைவி திருக்கோவிலூர் மலைமானின் மகள்.
கண்டராதித்ய சோழர் இறைபணியில் விருப்பமாக உள்ளார்.
எனவே பராந்தகரின் ஆட்சிக்காலத்தில் காலத்தில் அவர் பட்டத்து அரசராக இருக்கும் போதே (950-955) பெரும்பாலான அரசு பணிகளை .அரிஞ்சய சோழன் செய்கிறார். 955ல் பராந்தகர் இறந்த பிறகு அரசராகிறார். ஒரே வருடத்தில் இறந்து விடுகிறார்.
956ல் கண்டராதித்ய இறந்தபோது உத்தமசோழனுக்கு வயது மிகக்குறைவு என்பதால் அவரை அடுத்து 956ல் அரிஞ்சய சோழன் அரசராகிறார்.
அவரும் ஒரு வருடத்தில் இறந்து விடவே, அப்பொழுதும் கூட உத்தம சோழனின் வயது குறைவு என்பதாஅரிஞ்சய சோழரை தொடர்ந்து அவரது மகன் சுந்தர சோழன் 957ல் அரசராகிறார். சுந்தர சோழருக்கு மூன்று குழந்தைகள்
1. ஆதித்ய கரிகாலன் அல்லது ஆதித்யன் II
2. குந்தவை
3. அருண்மொழி – பின்னர் ராஜ ராஜ சோழன்
சுந்தர 12 வருடங்கள் அரசாள்கிறார். அந்நேரம் 969ல் அவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது
இந்நிலையில் அடுத்த அரசன் யார் என்று கேள்வி எழுகிறது
அரிஞ்சய சோழனும், சுந்தர சோழனும் அரசராகும் போது மதுராந்தக உத்தம சோழனுக்கு வயது குறைவு
எனவே அவர் அரசனாக முடியவில்லை
ஆனால்
சுந்தரசோழனுக்கு பக்கவாதம் வரும் போது மதுராந்தக உத்தமசோழன் வளர்ந்து பெரியவனாகிவிட்டார்
எனவே அவருக்கு இப்பொழுது ஆசை அதிகம்
இது மட்டும் பிரச்சனை அல்ல
செம்பியன் மாதேவியின் தந்தைக்கு அவரது பேரனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்
செம்பியன் மாதேவியின் சகோதரருக்கு அவரது மருமகனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்
திருக்கோவிலூர் மலைமானுக்கு அவரது பேரனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்
அவரது மகன், தற்பொழுதைய சிற்றரசருக்கு அவரது மருமகனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்
எனவே சுந்தர சோழருக்கு பக்கவாதம் ஏற்பட்ட போது நடந்த வாரிசு பிரச்சனை என்பது வெறும் அரண்மனை யுத்தம் மட்டுமல்ல அது சோழ பேரசரின் சிற்றரசுகளுக்கு இடைய நடந்த ஈகோ யுத்தம்
(650 ஆண்டுகள் கழித்து டெல்லியிலும் ஆக்ராவிலும் இதே தான் ஜாஹாங்கீர், குஸ்ரூ விஷயத்திலும் நடந்தது. இருவரின் மாமாவும், தாத்தாவவும் சேர்ந்து தூபம் போட்டு, தந்தையையும் மகனையும் மோதவிட்டார்கள் அந்த காலத்தில் அரசர்கள் படை திரட்டி வருகிறார்கள் என்று படித்திருப்போம். எப்படி திரட்ட முடியும், ஏது பணம் என்று பார்த்தால், இந்த தாத்தா, தாய்மாமன், மாமனார இருக்கும் பிற சிற்றரசர்களின் வேலை தான் அது. இது குறித்து இந்த நூலில் வாசிக்கலாம் )
இந்த நிலையில்
ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்படுகிறார். யார் கொன்றார்கள் என்று தெளிவான சரித்திரம் இல்லை
ஆதித்ய கரிகாலன் கொல்லப்படும் போது ராஜ ராஜ சோழன் இலங்கையில் உள்ளார்
அவரை அழைத்து வந்து அரசனாக்க வேண்டும் என்று அவரது தாத்தா, தாய்மாமன், மாமனார் சிற்றரசர்கள் + அவரது அக்கா குந்தவை முயல்கிறார்கள்
அதை தடுக்க மதுராந்தக உத்தம சோழனின் தாத்தா, தாய்மாமன், மாமனார் சிற்றரசர்கள் முயல்கிறார்கள்
ஆதித்ய கரிகாலனின் மரணத்தால் எழுந்த அனுதாப அலையால் மக்கள் ஆதரவு ராஜராஜ சோழனுக்கு பெரிதாக உள்ளது
ஆனால் அவர் அரசராக வில்லை. சிம்மாசனத்தை தனது சித்தப்பாவிற்கு தியாகம் செய்கிறார்
எனவே மதுராந்தக உத்தம சோழன் 970ல் சோழ அரசராகிறார்
இந்த நேரத்தில் ராஜ ராஜன் தோழர் படை தளபதியாகிறார்
சோழ ராஜ்யத்தை விரிவுபடுத்துகிறார்
985ல் மதுராந்தக உத்தமசோழன் மரணமடைகிறார். அவருக்கு மதுராந்தக கண்டராதித்யா என்று ஒரு மகன் இருந்தாலும்,
அதன் பிறகு சோழ சிம்மாசனம் ராஜ ராஜ சோழனின் வாரிசுகளுக்குத்தான் வருகிறது
985-1014 30 வருடங்கள் ராஜராஜசோழன்
1014-1044 30 வருடங்கள் ராஜேந்திர சோழன்
1044-1054 ராஜாதிராஜ சோழன்
1054-1059 இரண்டாம் ராஜேந்திர சோழன்
-oOo-
(II) என்ன நடந்திருக்கும் என்ற ஊகம்
ஆதித்ய சோழன் பெரிய போர் வீரன்.
அதனால் அந்த திமிர் இருந்திருக்கவேண்டும்
மதுராந்தக உத்தம சோழன் அரண்மனைக்குள்ளேயே வளர்ந்தவன்
அதனால் சிற்றரசர்களை மிகவும் மரியாதையாக நடத்தியிருப்பார்
எனவே பெரும்பாண்மையான சிற்றரசர்கள் மதுராந்தகன் தான் “நமக்கு ஏற்ற பீசு” என்று முடிவு செய்து மதுராந்தக உத்தம சோழனை ஆதரித்திருப்பார்கள்
அது தவிர
அவர்தான் பராந்தக இரண்டாது மகனின் மகன்
ஆதித்ய கரிகாலன் மூன்றாவது மகனின் பேரன் தான்
எனவே இந்த சிற்றரசர்கள் எல்லாம் சேர்ந்து போட்டு தள்ளிவிட்டார்கள்
ஆனால்
அதன் பிறகு மக்கள் அனுதாபம் ராஜராஜசோழன் பக்கம் திரும்பியது அவர்கள் எதிர்பாராது
ஆனால்
ராஜராஜன் புத்திசாலி
மக்கள் அனுதாபம் மட்டும் இருந்தால் போதாது
சிற்றரசர்களின் ஆதரவு வேண்டும் என்று புரிந்து கொண்டிருக்கவேண்டும்
அன்று அவர் சிம்மாசனம் ஏறியிருந்தால்
மதுராந்தக உத்தம சோழனால் தொல்லை/li>
சிற்றரசர்களினால் தொல்லை
மேற்றே சேரன், வடக்கே சாளுக்கியன், தெற்கே பாண்டியனால் தொல்லை
இவர் போருக்கு சென்றால் இங்கே அரண்மனை காலி
எனவே
மிகவும் திறமையாக உத்தம சோழனை அரசராக்கி விட்டு அவர் படைதளபதியாகிவிட்டார். (யுவராஜவாக கூட ஆகவில்லை). 970ல் அவருக்கு 23 வயது
தளபதி ஆகி போர் எடுத்து சென்று எல்லைகளை விரிவாக்கி எல்லையில் பிரச்சனை இல்லை என்ற நிலைக்கு கொண்டுவருகிறார்
சிற்றரசர்களின் ஆதரவை பெருகிறார்
அதன் பிறகு 985ல் மதுராந்தக உத்தமசோழன் இறந்த பிறகு
38ஆம் வயதில் சோழப்பேரரசராக முடி சூட்டிக்கொண்டு 29 ஆண்டுகள் அரசாள்கிறார்
67ஆம் வயதில் இறந்து விடுகிறார்
-oOo-
(III) கல்கி என்ன சொல்லியுள்ளார்
சுந்தர சோழருக்கு பக்கவாதம் ஏற்படுவதில் இருந்து
ராஜராஜன் சிம்மாசனத்தை தியாகம் செய்வது வரை
நடக்கும் நிகழ்ச்சிகளை கற்பனை கலந்து 6 பாகமாக (5 பாகம் தான். ஒன்று பெரிது) எழுதியது கல்கியின் சாதனை
மேலே கூறியவர்கள் தவிர
கல்கியின் கதையில் மேலும் சில கற்பனை கதாபாத்திரங்கள் வருகின்றன
நந்தினி
சேந்தன் அமுதன்
பூங்குழலி
வாணி அம்மாள்
மந்தாகினி
முருகையன்
ஆழ்வார்கடியன் நம்பி
வாணி அம்மாள் மந்தாகினியின் சகோதரி. இந்த இரு சகோதரிகளின் சகோதர் குழந்தைகள் தான் பூங்குழலி மற்றும் முருகையன்
வாணி அம்மாவின் வளர்ப்பு மகன் – சேந்தன் அமுதன் (கதைப்படி செம்பியன் மாதேவியின் புதல்வன் – பிற்காலத்தில் உத்தம சோழன்)
மந்தாகினியின் குழந்தைகள் – நந்தினி மற்றும் ஆரம்பத்தில் வரும் உத்தம சோழன் (கதைப்படி இவர் தான் ஆதித்ய கரிகாலனை கொல்பவர். ஆதித்ய கரிகாலனை கொன்ற உத்தம சோழனை ராஜராஜன் அரசனாக்கினால் அது தியாகம் இல்லையே. . . அது கோழைத்தனம் அல்லவா . .எனவே உத்தமச்சோழன் பாத்திரத்தை இரண்டாக பிரித்து
ஒன்று மந்தாகினின் குழந்தை – அவன் வில்லன்,
ஒன்று செம்பியன் மாதேவியில் மகன் – அவன் நல்லவன் என்று கல்கி ஆக்கிவிட்டார்
வாணி அம்மாள் – மந்தாகினியின் சகோதர் குழந்தைகள் தான்
பூங்குழலி மற்றும் ராக்கையன்
The Following are the list of books I have authored. Click the Title to Buy them. More details about the books below the table. இது என் நூல்களின் பட்டியல். நூலில் பெயரை சுட்டினால் நீங்கள் அதை வாங்க முடியும். மேலும் விபரங்கள் இந்த அட்டவணைக்கு கீழ் உள்ளன
Zulfi Raj’s Pre PG Medicine Handbook : 4th Edition
· Zulfi Raj’s Pre PG Medicine Handbook : 3rd Edition
English
Exam Preparation
56
RxPG TargetPG All India 2004
English
Exam Preparation
57
RxPG TargetPG All India 2005
English
Exam Preparation
58
RxPG TargetPG All India 2006
English
Exam Preparation
59
RxPG TargetPG All India 2008
English
Exam Preparation
பேலியோ உணவின் அறிவியலும் உளவியலும்: Science and Psychology of Paleo Diet
அமேசான் “பென் டு பப்ளிஷ் 2019” போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல் (Winner of the 2019 Kindle PentoPublish Contest conducted by Amazon). தவறான உணவு பழக்கம் மூலம் உடற்பருமன், நீரிழிவு, தைராய்டு பிரச்சனை, ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை ஆகியவை எப்படி ஏற்படுகிறது என்றும் அவற்றை சரியான உணவின் மூலம் அறிவியல் அடிப்படையில் எப்படி சரி செய்யலாம் என்றும் தமிழில் விளக்கும் நூல். இந்த நூலை மட்டும் படித்து விட்டு, நீங்கள் குறைமாவு உணவை உட்கொள்ளவோ, பரிந்துரைக்கவோ முடியாது. “30 நாட்களில் பேலியோ” என்ற எதிர்ப்பாப்பில் இதை தயவு செய்து வாசிக்காதீர்கள். மருத்துவர்களை பொறுத்த வரையில் மருத்துவக்கல்லூரில் முதலாம் ஆண்டும் முதல் இறுதியாண்டு வரை நீங்கள் ஏற்கனவே வாசித்த, கற்றுக்கொண்ட விஷயங்கள் பலவற்றை இணைத்து உங்களை இயல்பாக சிந்திக்கத்தூண்டும் ஒரு இழையாகத்தான் இந்த நூல் இருக்கும். மருத்துவரல்லாதவர்களைப் பொருத்தவரை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் குறைமாவு உணவினை எந்த தயக்கமும் இல்லாமல் சாப்பிட இங்கு கூறப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு உதவும். நூலை வாங்க இங்கு செல்லவும்
1615 ஒரு காதல் கதை Khusrau குஸ்ரூ A Love Story
முகலாய இளவரசர், ஜஹாங்கீரின் புதல்வர், ஷாஜஹானின் சகோதரர் குஸ்ரூவின் கதை. Story of Khusrau, Son of Jahangir and Brother of Shajahan . காதலுக்காக அரச பதவியை துறந்தவர்கள் பலர் உள்ளனர். காதலுக்காக உயிரை விட்டவர்கள் பலர் உள்ளனர். காதலுக்காக பதவி, உயிர், இரண்டையும் துச்சமென மதித்த குஸ்ரூவின் கதை இது. மேன்மை, வீரம், துரோகம், சோகம் என்று அனைத்தும் கலந்தது தான் குஸ்ரூவின் வாழ்க்கை. அதில் பரிசுத்தமான காதலிற்கும் இடமுண்டு. ஆனால் பாபர், ஹூமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான், அவுரங்கசீப் என்ற 6 முக்கிய முகலாய மன்னர்களின் வரிசையில் சரித்திரம் குஸ்ரூவிற்கு இடமளிக்க வில்லை. அவரால் ஒரு நாள் கூட முகலாய ஆட்சிபீடத்தில் அமர முடியவில்லை. ஆனால் அவரது காலத்தில் மக்களின் மனங்களில் இடம் பிடித்தார். இந்த கதையை படித்த பின்னர் உங்களின் மனதில் கூட இடம்பிடிக்கலாம். நூலை வாங்க இங்கு செல்லவும்
ஆர்கானிக் யூஜெனிக்ஸ்: செயற்கை நுண்ணறிவும் இயற்கை மூடத்தனமும் (Artificial Intelligence and Natural Stupidity : Organic Eugenics): புனைவு – சிறுகதை
இயற்கை விவசாயம், வீகனிசம், தடுப்பூசி எதிர்ப்பு, வீட்டில் பிரசவம், நவீன மருத்துவம் குறித்த அவதூறு, சிக்கன் சாப்பிட்டால் கெடுதி என்ற செய்தி எல்லாம் தற்செயலா, அல்லது யாராவது திட்டமிட்டு பரப்புகிறார்களா என்பது குறித்தம் மாற்று மருத்துவம், இயற்கை விவசாயம் ஆகியவற்றால் மனித குலத்திற்கு நன்மையா, தீமையா என்பது குறித்தம் உரையாடலை துவக்க ஒரு முயற்சி இந்த சிறுகதை. யூடுயுப், முகநூல் ஆகிய தளங்களின் செயற்கை நுண்ணறிவு எப்படி வேலை செய்கிறது என்றும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. நூலை வாங்க இங்கு செல்லவும். இந்த கதை ஆங்கிலத்திலும் உள்ளது
Artificial Intelligence and Natural Stupidity – Organic Eugenics
This is a short story aimed at finding the answer to a simple question. Are the various messages you get about “Organic Farming”, “Veganism”, “So Called Alternative Medicine @ SCAM”, Modern Medicine in General and Vaccines in Particular are merely a result of some one with low IQ and High Enthusiam getting a Smartphone and Net Connectivity or Is there a planned movement behind those ? The short Story also explains the Artificial Algorithm in Youtube and Facebook and the methods by which these sites and apps make you spend more time with them. This was originally written in Tamil by me and then in English. Book can be Bought in Amazon.in, Amazon.com as well as in Google Books
புருனோவின் பயணங்கள் : பாகம் 1 Payanangal : Bruno’s Tamil Blog Part I
தமிழ்மணம் திரட்டியில் வாரம் ஒரு பதிவரை விண்மீன் பதிவர் (நட்சத்திர பதிவர்) என்று குறித்து அவரது பதிவுகளை திரட்டியில் முதன்மைப்படுத்துவார்கள். அவ்வாறு 20 அக்டோபர் முதல் 27 அக்டோபர் 2008 வரை நான் விண்மீன் பதிவராக இருந்தேன். அந்த காலக்கட்டத்தில் 20 பதிவுகளை எழுதினேன். எனது ஆரம்ப சுகாதார நிலைய அனுபவங்களை வைத்து கிராமப்புற மருத்துவக்கதைகள் என்று நான்கு பதிவுகளும், கல்லூரி அனுபவங்களை வைத்து ஐந்து பதிவுகளும், பள்ளிவாழ்க்கை குறித்து ஒரு பதிவும், திரைப்படங்கள் குறித்து இரு பதிவுகளும், பொது அறிவியல் குறித்து ஒரு பதிவும், சமூக மருத்துவம் – நீரும் நோய்களும் என்ற தலைப்பில் ஏழு பதிவுகளும் என 20 பதிவுகளின் தொகுப்பு தான் இந்த நூல். அந்த கால வலைப்பதிவர்களுக்கு நினைவேக்கத்தை (nostalgia) ஏற்படுத்தவும், முகநூல், வாட்சப் மூலம் இணையம் வந்தவர்களுக்கு வலைப்பதிவு காலம் குறித்த ஒரு சிறு சாளரத்தை திறக்கவும், வலைப்பதிவு வாசிக்கும் உணர்வு அப்படியே (அல்லது பெருமளவு) கிடைக்கவும் கட்டுரைகளையும், மறுமொழிகளையும் தொகுக்காமல் (எடிட் செய்யாயமல்) அப்படியே தந்துள்ளேன். எனவே இது புத்தகமே அல்ல, இது வலைப்பதிவுகளின் வெட்டு, ஒட்டு (காப்பி, பேஸ்ட்). அதனால் புத்தகத்தின் கட்டுக்கோப்பை நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாற்றமடையலாம். நூலை வாங்க இங்கு செல்லவும்
“கொஞ்சம் ஏமாந்து இருந்தாலும் ஊசி போடாம அனுப்பிருப்பாரு அந்த சின்ன டாக்டர். நம்ம பெரிய டாக்டர் தான் ஊசி எழுதி தர சொன்னார். கவருமண்டு ஊசி குடுத்தா இவங்க கை காச குடுக்குற மாதிரி ரொம்பப் பண்றாங்க. மாத்திரை யாருக்கு வேணும்? இந்த மாத்திரைய எப்பவாது காய்ச்சல், தலைவலி வரும் போது போட்டுக்கலாம் கைல இருக்கட்டும். இப்ப ஊசி போடுங்கனா கேக்க மாட்றாங்க.” என்ற ஒரு சராசரி பொதுஜனத்தின் கருத்தின் பின்னால் உள்ள உளவியல் என்ன ? அரசு திட்டங்களை சலுகையாக பார்ப்பவர்களுக்கும், அதை உரிமையாக பார்ப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? ஆகிய கேள்விகளுக்கு உங்களை விடை தேட வைக்கும் உரையாடல்கள் உள்ள சிறு நூல்அரசு திட்டங்களை சலுகையாக பார்ப்பவர்களுக்கும், அதை உரிமையாக பார்ப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்ற கேள்விக்கு விடை. நூலை வாங்க இங்கு செல்லவும்.
தேயும் நடுத்தர வர்க்கம் அதிகரிக்கும் கடன்கள் : Waning Middle Class and Waxing Debts: http://www.pgmed.org/wmc தமிழக பொருளாதார மாற்றம் குறித்த சில கட்டுரைகள் தனியார்மயம், உலகமயம், தாராளமயம் ஆகியவை தமிழகத்தின் நடுத்தர வர்க்கத்தினரை எப்படி பாதித்தது என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியாக வலைத்தளத்தில் எழுதப்பட்ட சில கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். வலைப்பதிவு வாசிக்கும் உணர்வை நீங்கள் பெற பதிவுகள் எழுதிய காலத்தில் வந்த மறுமொழிகளும் சேர்க்கப்பட்டள்ளன.
பன்றிக் காய்ச்சல்
ஐஎஸ்பிஎன் 9788184932393 பதிப்பகம் மினி மேக்ஸ் கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்) . நூலை வாங்க இங்கு செல்லவும்.
51. TargetPG TNPSC 3rd Edition 1995 to 2009 : (References and Explanations for All 18 Papers from 1995 to 2009) Details of the Book:
ISBN: 978-81-89477-18-9
Price: Rs.550
Available through Online Order at INSTAMOJO and in case of any difficulty, Please contact Aravindan Whatsapp 8105882022 Mobile 7708479380 email aravikrish@gmail.com Same day dispatch for orders confirmed before 5PM
18 Original Question Papers from 1995 to 2009. Only Book that covers all questions asked in the past two decades
Special TNPSC 2009 Nov
General TNPSC 2009 Feb
Special TNPSC 2007 Dec
TNPSC 2007 May MHO Recruitment
General TNPSC 2005 October
General TNPSC 2003 October
Special TNPSC 2003 July
2000 Medical Science
2000 Medical Science
1999 Medical Science
1999 Medical Science
1998 Medical Science
1998 Medical Science
1997 Medical Science
1996 Medical Science
1996 Medical Science
1995 Medical Science
1995 Medical Science
3120 Original Questions
Answers Extensively Referenced from Standard Textbooks.
Detailed Explanation for Each Answer.
Questions with more than one answer (or no answer) are pointed out.
Relevant Diagrams and Tables
Other possible points in the topic that have been asked and can be asked are explained.
High Yield Topics are enumerated
Comments, Tips and Mnemonics for solving.
Notes on Preparation and Strategy Management.
Handy Size – Easy to Carry.
Online Extension at www.targetpg.in and www.mcqsonline.net
These are the various Kindle books released by my friends in 2020
The Author Names, Titles and the Link to the Amazon.in Page are given in the following table. More details are available below the table
English : Fiction – Romance : Released 2020 July 08
Prof Dr Prathibha KM, also from Thoothukudi and a friend for almost three decades, batch mate, Dissection Table Mate, Ward Mate during MBBS at Tirunelveli medical college, a voracious reader and excellent writer
had earlier been editor of Best and Taylor, one of the
Classical Text Books of Physiology and also
Editor / Reviewer of Various Medical Journals
As a change from her routine Medical Literature authorship
She has filled her pen with nectar of love and has today come out with a Romantic fiction titled “Rain Diaries..”
Readers looking for a quick light romantic piece of writing can do to Rain Diaries to Drench in Love at https://amzn.to/38CFwWQ
என் கோடு, உன் கோடு, யுனிகோடு, தனி கோடு: கணினியில் தமிழ் எழுத்துக்களை கையாள்வது தொடர்பான தொழில்நுட்ப தகவல்கள் பற்றிய எளிய அறிமுகம். A simple introduction to using Tamil in computers. (Tamil Edition)
by Kasi Arumugam
Tamil : Non Fiction – Computers – Tamil Font Released 2020 July 13
1
கணினியில் தமிழில் எழுதுவது எப்படியெல்லாம் மாறியது
2
யூனிக்கோடு என்றால் என்ன
3
நான் பத்து வருடம் முன்னர் பதிப்பித்த புத்தகத்தை
அப்படியே அமேசனில் கிண்டிலில் ஏற்ற ஏன் முடிவதில்லை
PIGGYBACK: TAKE OFF M.A.A. Kindle Edition by POOVANNAN Ganapathy
English : Fiction Released 2020 August 13
In this novel, the author weaves many different plots together
1.
What happens to a family between Two Bomb Blasts which shock Tamil Nadu and probably changed the history of Tamils ?
2.
The Day to Day Life of Workers in Aviation Industry
3.
Recruitments / Mergers and how they affect the employees
4.
Father’s love for his son
பின் நவீனத்துவம் என்றால் என்ன ?
பிற கலைவடிவங்கள் யாவை ?
Post Modernism என்பதை பின் நவீனத்துவம் என்று மொழி பெர்த்தது சரியா ?
என்று அறிய முதலில் இந்த கானொளியை பார்க்கவும்
உலகெங்கும் கலை என்பது ஒருபக்கம் மன்னர்களிடம் வாங்கி தின்றது (மைக்கேல் ஏஞ்சலோ முதல் கம்பன் வரை அரசர்களின் / வியாபாரிகளில் தயவில்தான் இருந்தார்கள்). அதே கலை என்பது மறுபக்கம் ஆளும் வர்க்கத்தை, பணக்காரர்களை கேள்வி கேடடது (மைக்கேல் ஏஞ்சலோ இரண்டையும் செய்தார். அவரது படைப்பு ஓவியம் குறித்து இந்த காணொளியை பார்க்கவும்). கலை என்பது சமூக வரலாற்றை, அறிவியல் வளர்ச்சியை, பொருளாதாரத்தை உள்வாங்கியது, செழுமைப்படுத்தியது
கலைவடிவங்கள் என்பது வரலாற்றுடனும், அறிவியலுடனும் நெருங்கிய தொடர்பு உடையவை. நான் ஏற்கனவே காணொலியில் கூறியிருந்தபடி, பண்டைய கால கலை என்பது ரோமேனிய பேரரசு உச்சத்தில் இருந்த போது இருந்த கலை. அதற்கு அடுத்த 1000 வருடம் இருண்ட காலத்தில் அதற்கேற்ற கலை வடிவம் இருந்தது. மறுமலர்ச்சி என்பது மீண்டும் ஐரோப்பியவில் செல்வம் செழிக்கும் போது வந்தது. நவீன ஓவியம் என்பது புகைப்பட கருவி கண்டுபிடிக்கப்பட்ட போது வந்தது
-oOo-
நவீனத்துவத்திற்கு அடுத்த காலக்கலையில் (Post Modernism) Skepticism, Irony, Philosophical critiques ஆகியவை முக்கிய கூறுகள். இதில்
Skepticism என்பது நம்பிக்கையில்லாமல் இருப்பது. அதாவது தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்துவது
Irony என்பது முரண் நகை
Philosophical critiques என்பது தத்துவ விமர்சனம்
இந்தெ மூன்று விஷயங்களையும் புரிந்து கொள்ளவேண்டும் என்றால் நீங்கள் உலகவரலாற்றுடன் அவற்றை இணைத்து பார்க்க வேண்டும்
1960களில் பனிப்போர் உச்சம் அடைந்த சமயம், வியட்நாம் போரில் அமெரிக்கா மூக்குடைபட்ட போது
பெருசா சுதந்திரம், சமத்துவம் என்று சொல்லிக்கொண்டு வியட்நாமில் என்ன புடுங்குற என்று அமெரிக்காவையும் ?
ரஷ்யா தனது பிற நாடுகள் மீது உருசிய மொழியை திணிக்க முற்பட்ட போது, பொதுவுடமைன்னு சொல்லிக்கிட்டு ஏன் உக்ரேனிய மொழியை அழிக்கிறாய் என்று ரஷ்யாவின் ஆளும் பொதுவுடமை கட்சியையும்,
கடவுளை நம்பும் நீங்கள் அனைவருக்கும் உணவும் கல்வியும் மருத்துவமும் அளிக்காமல் ஆயுதம் வாங்குகிறீர்களே என்று ஐரோப்பியர்களையும்
கேள்வி கேட்டது தான் Skepticism. இவர்களின் மேல் உள்ள அவநம்பிக்கையில் வெளிப்பாடே Skepticism
உன் கொள்கைக்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்லையே ? முரணாக உள்ளதே என்றது Irony. இவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதே முரண்நகை Irony
இந்த பனிப்போர் என்பது அதிகாரம் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து நடந்த போது, ஐரோப்பாவில் மதக்கோட்பாடுகள் பின்னால் தள்ளப்பட்டன, அமெரிக்காவில் முதலாளித்துவ கோட்பாடுகள் பின்னால் தள்ளப்பட்டன, ரஷ்யாவில் பொதுவுடமை கோட்பாடுகள் பின்னால் தள்ளப்பட்டன. இவை அனைத்தையும் விமர்சிக்கவேண்டும் என்பதே தத்துவ விமர்சணம் Philosophical critiques
நாம் ஏற்கனவே பார்த்தபடி உலகெங்கும்
கலை என்பது ஒருபக்கம் மன்னர்களிடம் வாங்கி தின்றது
கலை அடுத்த பக்கம் ஆளும் வர்க்கத்தை, பணக்காரர்களை கேள்வி கேட்டது. அதன் மூலம் கலை என்பது சமூக வரலாற்றை, அறிவியல் வளர்ச்சியை, பொருளாதாரத்தை உள்வாங்கியது, செழுமைப்படுத்தியது
மைக்கேல் ஏஞ்சலோ எப்படி கேள்வி கேட்டார் என்று அறிய இந்த காணிளியை பார்க்கவும்
எனவே, 1970களில் அதிகார வர்க்கத்தையும், பெருநிறுவனங்களையும் கேள்வி கேட்க முனைந்ததே நவீனத்துவத்திற்கு அடுத்த கால கலை
ஆனால் தமிழகத்தில் மட்டுமே இந்த் போஸ்ட்மாடர்னிச பேர்வழிகள்
சமூகம், அறிவியல், பொருளாதாரம், வரலாறு, ஆட்சி என்று புறத்தினையை வேண்டுமென்றே பின் தள்ளி
அகவொளி தரிசனம், காதல், திருமணம் தாண்டிய உறவுப்பிரியர்கள் !, என்று அகத்தினையை முன் வைத்து
1980கள் முதல் 2020 வரை இருந்த ஒரு தலைமுறையை intellectual castration செய்து விட்டார்கள்.
-oOo-
வரலாறும் பொருளாதாரமும் விஞ்ஞானமும் கலை வடிவத்தை மாற்றிக்கொண்டே வரும். ஆனால் இந்த மாற்றம் என்பது ஒரே நாளில், நாம் நமது செல்லிடப்பேசியில் (Mobile Phone) செயலிகளை (App) மாற்றுவதை போல் ஒரேநாளில் நடக்காது. பல ஆண்டுகள், சில தசாப்தங்கள் ஆகலாம். அப்படி மாறும் போது சில இடைமாறுபாட்டு கலைவடிவங்களும் (Transition Arts) வரும்.
திரைப்படம் வந்தவுடன் நாடகங்களைத்தான் திரையில் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதாவது நாடகக்கலை திரையில் வந்தது. பிறகு தான் திரைப்படம் திரையில் வந்தது. பாரதிராஜா தான் மாற்றினார். அதன் பிறகு பாக்கியராஜ் திரைக்கதை என்பதை முதன்மை படுத்தினார். மணிரத்னம் வந்த பிறகு அது காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஷங்கர் வந்த பிறகு பிரமாண்டம் என்று ஆனது
எந்த ஒரு நவீன கருவியையும் நாம் பயன்படுத்த ஆரம்பிக்கும் போது அதற்கான கலைவடிவம் உடனே வளராது முதலில் அது முந்தைய வடிவத்தில் தான் இருக்கும்
முதலில் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றை நாம் எப்படி பயன்படுத்தினோம் என்று பார்க்கலாம் முதலில் வானொலியை பயன்படுத்தினோம் பிறகு தொலைக்காட்சி வந்தது. ஆனால் தொலைக்காட்சி வந்த புதிதில், அதாவது 1980களில் நாம் தொலைக்காட்சியை எப்படி பயன்படுத்தினோம் என்பதை நினைத்து பார்க்கலாம்
1980களில் தொலைக்காட்சிகளில் இருந்த பெரும்பாலான நிகழ்ச்சிகள் – வயலும் வாழ்வும், எதிரொலி போன்றவை – எப்படி இருந்தன . அவை வானொலி நிகழ்ச்சிகளே வெள்ளி மாலை “ஒலியும் ஒளியும்” மற்றும் ஞாயிறு மாலை திரைப்படம் தவிர மீதி பெரும்பாண்மையான நிகழ்ச்சிகள் வானொலி நிகழ்ச்சிகள் போலவே இருந்தன
அதாவது
வானொலியை விட தொலைக்காட்சியில் அதிக வசதி இருந்தும், தொலைக்காட்சி அறிமுகமான புதிதில் அதை நாம் வானொலி போலவே பயன் படுத்தி வந்தோம். தொலைக்காட்சியின் முழுப்பயன்களை பயன் படுத்த நமக்கும் பல ஆண்டுகள் ஆகின. வானொலி பயன்படுத்திய நாம் தொலைக்காட்சி கிடைத்த உடன் அதன் முழு பயன்களையும் பயன்படுத்தவில்லை. அதை வானொலியாகவே பயன் படுத்தினோம்
அடுத்த உதாரணம் தட்டச்சு கருவி, கணினி. 1990களில் இந்தியாவில் கணினி அறிமுகமானது. அடுத்த பத்தாண்டுகளில் அது வெறும் தட்டச்சு கருவியாகத்தான் பயன்பட்டது. Mail Merge போன்ற வசதிகளை கூட பயன் படுத்தியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 99 1990களில் சதவித கணினிகளில் தட்டச்சு தவிர பிரிண்ஸ் ஆப் பெர்சியா, டிக்கர், கார் பந்தயம் ஆகிய விளையாட்டுக்களை விளையாடினார்கள். அவ்வளவு தான் !!
தட்டச்சு கருவியை விட அதிக வசதிகள் இருந்தும், ஆரம்ப காலகட்டத்தில் நாம் கணினியை தட்டச்சு கருவியாகவே பயன் படுத்தி வந்தோம். கணினியின் முழுப்பயன்களை பயன்படுத்த நமக்கு பல ஆண்டுகள் ஆகின
தட்டச்சு கருவி பயன்படுத்தி பழகிய நாம், கணினி கிடைத்தவுடன் அதன் முழுப்பயன்களையும் பயன்படுத்த வில்லை. அதை தட்டச்சு கருவியாகவே பயண் படுத்தினோம்
சின்னத்திரை வந்த போது, 1980களில்ச்சில தொடர்கள் சினிமா போல் இருந்தன சில நாடகம் போல் தான் இருந்தன. 1990களில் நடுவில் வந்த சாந்தியும், இறுதியில் மர்மதேசம் போன்ற தொடர்கள் தான் சின்னத்திரையில் கூறுகளை அடைந்தது.
அதே போல் தமிழும் அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளது.
கீழே E=mc² என்ற பௌதீக சமன்பாட்டை ஒரு வகையாக எழுதியுள்ளேன். ஒரே விஷயத்தைத்தான் எழுதியுள்ளேன். முன்னது 1970கால கட்ட இலக்கிய நடை. பின்னது நவீன கணினி இனைய கால இலக்கிய நடை. இதில் எது உங்களுக்கு புரிகிறது
1
ஓய்வில்லாத நிரந்திர பிரபஞ்ச பெருவெளியில் அசைந்தும் அசையாமலுமிருக்கும் அனைத்து பொருட்களினுள் ஆற்றல் அடங்கியுள்ளதென்று ஐண்ஸ்டைன் தனது ஆற்றல்-திணிவு சமன்பாட்டில் கூறிய கூற்றானது ஆர்க்கிமிடிசில் இருந்து கலிலி வழி நியூட்டன் ஈறாக வந்த பௌதீக ஞான மரபு சிந்தைகளை கட்டுடைத்து அதன் பிறகு அதுகாறும் இருந்த வெளி மற்றும் காலம் (time) பற்றிய நெடிதிருந்த கருத்துகளை நிராகரித்து மிகப்பரந்த அளவில் அறியப்பட்ட கணித, இயற்பியல் சமன்பாடாக தன்னை உருமாற்றிக்கொண்டது
2
எந்த ஒரு பொருளிலும், அந்த பொருளின் எடைக்கு ஏற்ப சக்தியும் அடங்கியுள்ளது. அந்த சக்தியை அளவிடவும் முடியும் என்று ஐண்ஸ்டைன் கூறினார்
#டிஜிட்டல் இலக்கியம்
நவீனத்துவத்திற்கு அடுத்த கால கட்ட கலை என்பது வேறு. கணினி இனைய கால கலை என்பது வேறு. நவீன கால கட்ட படைப்பு என்பது மின்னனு கருவில் வருவதாலேயே அது இணைய கால கலைப்படைப்பு ஆகிவிடாது. இதே போல் இன்று பழைய கலை வடிவங்கள் யூடியுபிலும், கிண்டிலிலும் வரலாம். ஆனால் கணினி இணைய கால கலை வடிவங்களே, இனிவரும் காலங்களில் முதன்மை பெரும் அனைத்து மக்களுக்கான கலைவடிவமாக மாறும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை இந்த அட்டவணையில் பார்க்கலாம்.
குப்பை இலக்கியம், சக்கை இலக்கியம், மக்கள் இலக்கியம் பிறழிலக்கியம்
இதில், பாலச்சந்தர் தான் சூப்பர் ஸ்டார். நாடகம் போட்டார். திரைக்கு வந்தார். திரைக்கு வந்த போது நாடகங்களையே திரையில் எடுத்தார். பிறகு 1980களில் திரைப்படங்கள் எடுத்தார். 1980களில் தொலைக்காட்சி வந்த போது ஆரம்பங்களில் திரைக்கதைகளேயே தொலைக்காட்சி தொடராக எடுத்தார் பிறகு தொலைக்காட்சிக்கான புது வடிவிற்கு 1990களில் மாறினார்
அதே போல் காலம் மாற மாற கலைவடிவங்களும் மாறும். அதற்கு ஏற்ப மாறும் கலைஞர்கள் இயல்பாக வெற்றி பெருவார்கள். காலமாற்றத்தை உணராதவர்கள் புலம்பிக்கொண்டே தனக்கு தானே ரசிகர் கடிதம் எழுதிக்கொண்டே இருக்க வேண்டியது தான்
திராவிட வாசிப்பு மின்னிதழின் பத்தாவது இதழில் என் பேட்டி வெளிவந்துள்ளது. இதழ் குறித்த அறிமுகம்
திராவிட வாசிப்பு மின்னிதழின் பத்தாவது இதழ் இது.
அமேசான் நடத்திய கிண்டில் போட்டியில் திராவிட எழுத்தாளர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த இதழை கிண்டில் வெற்றி சிறப்பிதழாக கொண்டு வந்து இருக்கிறோம். போட்டியில் வெற்றிபெற்ற எழுத்தாளர் கோவி. லெனின், மருத்துவர். புருனோ , டான் அசோக், ரவிசங்கர் அய்யாக்கண்ணு, பாலாசிங் ஆகியோரின் பேட்டிகள் இந்த இதழில் வந்து இருக்கிறது. ஆங்கிலத்தில் கதைகள் எழுதிய மருத்துவர். பூவண்ணன் கணபதி மற்றும் கதிர் ஆர்.எஸ் ஆகியோரின் பேட்டிகளும் இருக்கிறது.
கிண்டில் போட்டிகளில் தங்கள் பங்களிப்புகளை அளித்த கார்ட்டூனிஸ்ட் கௌதம் அம்பேத்கர், கவர் டிசைனர் யூசுப் பாசித், திராவிட வாசகர் வட்டம் மூலமாக அண்ணா சிறுகதை போட்டியை ஒருங்கிணைத்த கபிலன் காமராஜ், சமூக நீதியை தன் கதைகள் மூலமாக வெளிக்கொணர்ந்த வியன் பிரதீப் ஆகியோர் தங்களது கிண்டில் அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.
இம்மாத இதழில், பெரியாரிய வாழ்வியலை குறித்து தோழர் கனிமொழி எழுதும் தொடரும், குழந்தைகள் செயல்பாட்டாளர் இனியனின் ‘குழந்தைகளும் நானும்’ தொடரும் வெளியாகிறது. தொடர்ச்சியான உரையாடல்களை தங்களது கட்டுரைகள் மூலம் இவர்கள் நடத்தி வருகிறார்கள்.
நாகூர் அனிபா குறித்து யாசிர் எழுதிய கட்டுரையும், முரசொலி குறித்து பிரேம் முருகன் எழுதிய கட்டுரையும் இந்த இதழில் வெளியாகி இருக்கிறது.
பல்சுவையும், பல்வேறு தகவல்களையும் தரும் ஒரு இதழாக இது இருக்கும்.
திராவிட வாசிப்பு குறித்த உங்களது மேலான கருத்துகளை, விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். கீழ்காணும் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை சொல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!
உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்: dravidavaasippu@gmail.com
கட்டுரைகளை திராவிட வாசிப்பு ஆன்லைன் பக்கத்திலும் வாசிக்கலாம்: https://blog.dravidiansearch.com/
இப்படிக்கு,
திராவிட வாசிப்பு Editorial Team:
(அருண் ஆஷ்லி, அசோக் குமார் ஜெ, அஷ்வினி செல்வராஜ், தினேஷ் குமார், ஜெகன் தங்கதுரை, கதிர் ஆர்.எஸ்., மனிதி தெரசா, இராஜராஜன் ஆர். ஜெ, யூசுப் பாசித், விக்னேஷ் ஆனந்த், விஜய் கோபால்சாமி)
பேட்டி
1) கிண்டில் போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது? அனைவரும் புனைவு, கதைகள் என எழுதிய போது, நீங்கள் அறிவியல் குறித்த ஒரு புத்தகம் எழுதிய காரணம் என்ன?
இலக்கியம் என்பது கவிதை, நாடகம், புனைவு, அபுனைவு என்று வகைப்படும். ஆனால் தமிழில், அதிலும் கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக இலக்கியம் என்பது புனைவு என்பது மட்டும் என்பது போலும், இலக்கியவாதி என்றால் அவர் நாவல் / சிறுகதை எழுதவேண்டும் என்பது போலும் ஒரு செயற்கை கட்டமைப்பு உருவாகியுள்ளது.
இதனால் பொருளாதாரம், விஞ்ஞானம், சமூக வரலாறு என்று வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை கூட நம் மக்கள் புனைவில் இருந்து பிழையாக கற்று, அதை நம்பி, இந்த தவறான பொருளாதாரம் கோட்பாடுகள், தவறான அறிவியல் செய்திகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கை தொடர்பான முடிவுகளை கூட தவறாக எடுத்து அவஸ்தைபட்டு வருவதை உறவினர்கள், உடன்பயின்றோர், நண்பர்கள் வட்டத்தில் பார்த்து வருகிறேன்
இதை மாற்ற வேண்டுமென்றால் அபுனைவு நூல்கள் வரவேண்டும், முக்கியமாக பொருளாதாரம், அறிவியல், வரலாறு தொடர்பான நிறைய நூல்கள் வரவேண்டும், அவை துறை சார்ந்த நிபுணர்களால் எழுதப்படவேண்டும்
பாறைகளில் எழுதியது, களிமண்மாத்திரைகளில் எழுதியது, தோலில் எழுதியது, ஓலைகளில் எழுதியது, காகிதங்களில் எழுதியது என்ற வரலாற்றில் எப்படி அச்சு இயந்திரம் ஒரு முக்கிய மாற்றமோ, அதே போல் மின்னூல் என்பதும் ஒரு வரலாற்று திருப்புமுனை. எனவே இந்த வாய்ப்பில் தமிழில் அபுனைவு நூல்கள், சரியான தகவல்களை அளிக்கும் நூல்கள், வர இந்த போட்டில் ஒரு சிறந்த வாய்ப்பு என்று நினைத்தேன். அதனால் பங்கு பெற்றேன்
2) தமிழில் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புத்தகத்திற்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. இதையெப்படி பார்க்கிறீர்கள்?
மருத்துவம் மட்டுமல்லாது, அனைத்து துறைகளிலும் அறிவியல் நூல்கள் எழுதப்பட இது தூண்டுகோலாக இருக்கும் என்று நினைக்கிறேன்
3) பேலியோ குறித்து ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?
நான் நூலில் குறிப்பிட்டிருந்தபடி தமிழகத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், தமிழகம் வளர்ந்ததைப் போல் அதே அளவு வளர்ந்த பல நாடுகளில், மாநிலங்களில் அதிகரித்த சர்க்கரை நோயளிகளின் எண்ணிக்கையை விட தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பாஸ்ட் புட் மட்டுமே, இதற்கு காரணம் உடற்பயிற்சியின்மை மட்டுமே போன்ற தவறான கருத்துக்களும் பரவியுள்ளன. மேலும் இதை உடற்பயிற்சி மூலம் மட்டுமே சரி செய்து விடலாம் என்றும் சிலர் அறியாமல் கூறுகிறார்கள்
இது மிகவும் கவலைக்குரிய விஷயம். மற்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எதனால் இந்த மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை புரிந்து கொள்ளாமல் இதை மாற்ற நடவடிக்கை எடுக்க முடியாது. இது குறித்த சரியான புரிதல் பலருக்கும் இல்லை. மேலுல் சிலர் இந்த பிரச்சனையை ஒற்றை பரிமாணத்தில் மட்டுமே அணுகுவதால் தவறான முடிவிற்கு வருகிறார்கள்
தமிழகத்தில் உடற்பருமன் மற்றும் நீரிழிவு நோய்களின் மிக அதிகமான எண்ணிக்கை மற்றும் சதவீதத்தை அறிந்து கொண்டு, புரிந்து கொண்டு, ஏற்றுக்கொண்டு, இதன் பின் உள்ள காரணங்களை அறிவியல் ரீதியாக அணுகினால் மட்டுமே இதற்கான தீர்வை அடைய முடியும். நமக்குப் பிடித்த தீர்வை மட்டுமே வற்புறுத்துவதாலோ, நமக்கு எளிதாக தோன்றும் தீர்வை முன்னிறுத்துவதாலோ, அல்லது பிரச்சனையை அறிவியல் ரீதியாக அணுகாமல் குத்துமதிப்பாக தீர்வை சொல்வதாலோ பிரச்சனை தீராது. மேலும் மோசமடையவே செய்யும்
இந்த மாற்றங்களுக்கான காரணம் என்ன ? எப்படி சென்னை இந்தியாவின் சர்க்கரை நோய் தலைநகரம் என்ற பெயரைப்பெற்றது ? இந்த நிலையை மாற்றுவது எப்படி ? இந்த கேள்விகளுக்கு முற்றிலும் அறிவியல் பூர்வமாக, நவீன மருத்துவ அடிப்படை கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே விடை கூற வேண்டிய அவசியம் இருந்தது. அதனால் தான் இந்த நூல்
4) நீங்கள் வெகுநாட்களாக சமூக ஊடகங்களிலும், அச்சு பதிப்புத்துறை, ஆன்லைன் பதிப்புத்துறையில் ஈடுபட்டு வருகிறீர்கள். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படிப்பார்க்கிறீர்கள்? புத்தக வாசிப்பை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வளர்க்குமா? தடுக்குமா?
மாற்றம் ஒன்றுதான் மாறாதது, மாறுவதெல்லாம் உயிரோடு, மாறாததெல்லாம் மண்ணோடு
தொழிற்நுட்ப வளர்ச்சி என்பது புத்தக வாசிப்பை கண்டிப்பாக அதிகரிக்கும். மேலும் கிண்டில் அன்லிமிடட் போன்ற வசதிகள் மூலம் குறிப்பிட்ட கட்டணத்தில் எத்தனை நூல்களை வேண்டுமானால் படித்துக்கொள்ளலாம் என்ற வசதிகள் இருப்பதால் ஒருவர் வாசிக்கும் நூல்களின் எண்ணிக்கை கண்டிப்பாக அதிகரிக்கும்
5) தமிழ்நாட்டின் மருத்துவ கட்டுமானம் குறித்து நீங்கள் தொடர்ந்து எழுதிவருபவர். இன்றைய நவீன மருத்துவம் குறித்தும், தமிழ்நாட்டு மருத்துவர்கள், மருத்துவ கட்டுமானம் குறித்தும் பல தவறான தகவல்கள் இணையங்களில் வலம் வருகிறது. இவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
எந்த துறை குறித்தும் தவறான தகவல்கள் வலம் வர இரு வகையான காரணங்கள் உள்ளன
அறியாமை
பொறாமை / காழ்ப்புணர்ச்சி / வன்மம் / வக்கிரம்
இதில் அறியாமையால் வலம் வரும் தவறான தகவல்களை சரியான தகவல்களை கூறுவதன் மூலம் சரி செய்து விடலாம். எனவே நிறைய பேர் எழுதவேண்டும். நிறைய எழுதவேண்டும். தொடர்ந்து எழுத வேண்டும்
சரியான தகவல்கள் நிறையபேரை சென்று அடைந்தால், அவர்கள் உண்மையை புரிந்து கொண்டால், அவர்கள் தவறான தகவல்களை பகிர மாட்டார்கள். எனவே இரண்டாம் வகை பரவுவதும் நின்று விடும். மந்தை நோய் தடுப்பாற்றல் போல் தான் இதுவும்
6) உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்? புத்தகங்கள் எது?
அம்புலிமாமா, பால மித்ரா, ரத்னபாலா, பூந்தளிர், பூந்தளிர் அமர்சித்ர கதைகள், சிறுவர் மலர், Chandamama என்று தான் ஆரம்பித்தது வாழ்க்கை. சிறுவயதில் பரிசு பெற்ற Land of Sunbeam Bunnies கதை நினைவில் இருக்கிறது. பிடித்த எழுத்தாளர்கள் நிறைய பேர் உள்ளார்கள். ஆனால் ஒருவரை மட்டும் தான் கூறவேண்டும் என்று கேட்டால் தயங்காமல் வாண்டுமாமா பெயரைத்தான் சொல்வேன். வரலாறு, அறிவியல் என்று பூந்தளிரில் அவர் எழுதிய ஒவ்வொறு கட்டுரையும் பொக்கிஷம். எனக்கு புனைவை விட அபுனைவு அதிகம் பிடித்ததற்கு காரணம் அவர் தான் என்று நினைக்கிறேன்
பிறகு குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், கல்கண்டு, தேவி, ரானி, இதயம் பேசுகிறது, சாவி, ரானி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், Indian Express, Hindu, Sportstar, Competition Success, Competition Success GK, என்று பொழுது போனது. விகடனில் பூக்குட்டி, ஆ தொடர்கள் படித்த ஞாபகம் உள்ளது. குமுதத்தில் சிட்னி ஷெல்டனின் தாரகையும் லாராவும் படித்தது ஞாபகம் உள்ளது
இது தவிர பள்ளி நூலகத்தில் இருந்த நூல்கள், இது தவிர அம்மா நூலகத்தில் இருந்து எடுத்து வந்து தரும் நூல்களும் வாசித்தேன். அதில் பிடித்தது ஷெர்லாக் ஹோம்ஸ். பள்ளியில் வருடந்தோறும் நடக்கும் ரஷ்ய நூலக கண்காட்சியில் வாங்கிய நூல்களை எல்லாம் திரும்ப திரும்ப வாசித்துள்ளேன். முக்கியமாக Dunno கதைகள். 107 Short Stories above Chemistry பல முறை படித்து வியந்த நூல். அறிவியல் குறித்து இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியுமா என்ற ஆச்சரியம் தரும் நூல் அது.
இது தவிர ஷெர்லாக் ஹோம்சின் 4 நாவல்கள் மற்றும் 56 சிறுகதைகளையும் பல முறை படித்ததால் பிரச்சனைகளை அனைத்து ஆராயும் மனது வந்தது என்று நினைக்கிறேன்.
ராகி ரங்கராஜனின் தாரகையால் கவரப்பட்டு Sydney Sheldonஆங்கில நூலை வாசிக்க ஆரம்பித்து. தூத்துக்குடி Harini Lending Libraryல் சேர்ந்து Jeffrey Archer, Michael Crichton, Frederick Forysth, Alistair Maclean, Colin Forbes என்று போனது. அத்துடன் ராஜேஷ்குமர், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் இந்திரா சௌந்திரராஜனின் பாக்கெட் நாவல்கள். ரூத்ரவீணை எல்லாம் வெளிவந்த போதே வாசித்தேன்.
மருத்துவத்துறையை பொருத்தவரை, எனக்கு பிடித்தது சௌத்ரியின் உடலியக்கவியல், அவரின் மருந்தியல், ஹார்பரின் உயிர்வேதியல் கேனாங்கின் உடலியக்கவியல், கைடனின் உடலியக்கவியல், பெய்லி அண்ட் லவ், ஆடம்ஸ் நரம்பியல், லிப்பின்காட் உயிர்வேதியல், சாட்டர்ஜி உயிர்வேதியல், சாட்டர்ஜி ஒட்டுண்ணியியல் ஆகிய நூல்கள்.
இது தவிர அதுல் கவாண்டே, சித்தார்த முகர்ஜி ஆகியோரின் நூல்களும் எனக்கு பிடிக்கும். அறிவியலை புனைவுடன் மட்டுமல்லாது பொருளாதார பின்புலத்துடன் வழங்குவதில் மைக்கேல் கிரைட்டனின் பாணி மிகவும் சுவாரசியமானது. அவரது கேஸ் ஆப் நீட், ஜூராசிக் பார்க், ஸ்டேட் ஆப் பியர் என்று எந்த நூலை எடுத்தாலும் அதில் விஞ்ஞானமும் பொருளாதாரமும் எப்படி பினைந்துள்ளன என்றும் அவற்றை எப்படி சீர் தூக்கி பார்க்க வேண்டும் என்றும் தெளிவாக கூறப்பட்டிருக்கும். பலரும் அவரது நூல்களில் உள்ள அறிவியலை மட்டும் புரிந்து கொண்டு பொருளாதாரத்தை சாய்சில் விட்டு விடுகிறார்கள். அரசு மருத்துவத்துறை, தனியார் மருத்துவத்துறையில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கான காரணங்களை அவர் நூல்களில் இருந்து எளிதில் புரிந்து கொள்ளலாம்.
அரசு ஏன் இப்படி செயல்படுகிறது. அரசு அதிகாரிகள் ஏன் அப்படி செயல்படுகிறார்கள், அரசியல்வாதிகள் எதை நோக்கி செல்கிறார்கள் என்பதை தொடர்ந்து ஆராயும் நூல்கள் பிரடெரிக் பார்சித்தின் புனைவுகள். அவர் ஐரோப்பியா குறித்து எழுதினாலும், அவற்றை நம் நாட்டுடன் பொருத்தி பார்ப்பது கடினமல்ல. அவரது நூல்களை வாசித்த பிறகு நான் அரசியல்வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் அவர்கள் செய்யாத தவறுகளுக்கு எல்லாம் குறை கூறுவது நிறுத்திக்கொண்டேன். பிரச்சனை எங்கு உள்ளது என்று எளிதில் புரிந்தது. இதே வரிசையில் உள்ள மற்றொரு நூல் மரிய புசோவின் காட்பாதர். படம் நல்ல படம் தான். ஆனால் நூலில் உள்ள விஷயங்களில் 10 சதம் தான் படத்தில் உள்ளது.
தனிப்பட்ட வாழ்வில் நாம் சந்திக்கும் நபர்களில் யாருமே கெட்டவர்கள் அல்ல. அவர்கள் நல்லவர்கள் தான். ஆனால் சில நேரங்களில் தெரிந்தோ, தெரியாமலேயோ அவர்கள் சில பல தவறுகளை செய்துவிடுகிறார்கள் என்ற புரிதலை ஏற்படுத்தியது ஜே.கே. ரவுலிங்கின் ஹாரி பாட்டர் நூல்கள்.
இப்பொழுதும் எனது கிண்டிலில் பயணங்களின் போதும், சாப்பிடும் போதும் (சாப்பிடும் போது வாசிப்பது நல்ல பழக்கமா என்று தெரியாது J ) நான் திரும்ப திரும்ப வாசிப்பது ஷெர்லாக் ஹோம்ஸ், ஹாரி பாட்டர், பிரடெரிக் பார்சித்தான். ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிதாக ஏதாவது தகவல் கிடைக்கும். அல்லது சமீபத்தில் நடந்த விஷயம், அல்லது கேள்விப்பட்ட விஷயத்துடன் பொருத்தி பார்த்து தெளிவு கிடைக்கும்.
சில நூல்கள் நன்றாக இருக்கும், திரையில் எடுக்கும் போது சொதப்பி விடுவார்கள். வாசித்தால் போது. பார்க்க வேண்டாம். சில நூல்கள் திரையில் நன்றாக இருக்கும். பார்த்தால் போதும். வாசிக்க வேண்டாம். ஆனால் ஜூராசிக் பார்க், ஹாரிபாட்டார் நூல்கள், காட்பாதர் போன்ற வெகு சில நூல்களை வாசிப்பது அறிவையும், திரையில் பார்ப்பது அனுபவத்தையும் தரும்
il etait beaucoup nous de fois un livre vaut mieux que le film
il etait beaucoup nous de fois un film vaut mieux que le livre
Mais Il y en a peu, très peu, peut-être une poignée,
quand les deux sont également bons
There are few books which are better than movies
There are few movies which are better than books
But
There are few, very few when both are equally good
7) புதிதாக எழுத வருபவர்களுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?
என்ன எழுதுவது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்
புனைவா, அல்லது அபுனைவா ?
புனைவு என்றால் முற்றிலும் கற்பனையா அல்லது ஏதாவது சம்பவத்தின் அடிப்படையிலா ?
அபுனைவு என்றால் யாருக்கு எழுதுகிறீர்கள்
பள்ளி மாணவர்களுக்கா ?
துறையில் இருப்பவர்களுக்கா ?
பொது மக்களுக்கா ?
இந்த புரிதல் மற்றும் தெளிவு அவசியம்
8) உங்களது மற்ற புத்தகங்களை குறித்து சொல்லுங்கள்..
இது தவிர பல நூல்களில் அத்தியாயங்கள் எழுதியுள்ளேன். ரிசெப்டார் என்ற மருத்துவ மாணவர்களுக்கான இதழின் ஆசிரியர் குழுவில் இருந்துள்ளேன்.
9) அடுத்து எதைக் குறித்து எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்? எதிர்கால திட்டம் என்ன?
1990களில் இந்திய பொருளாதாரம் நோயுற்று இருந்த சமயம் அந்த நோய்க்கு மருந்தாக தனியார்மயம், உலகமயம், தாராளமயம், நவீனமயம் ஆகிய நான்கு கோட்பாடுகள் முன்னிறுத்தப்பட்டன.
எவ்வளவு சிறப்பான மருந்து என்றாலும் அதை சரியான அளவில் கொடுக்கவேண்டும். அளவு குறைந்தால் மருந்து வேலை செய்யாது. அளவு கூடிவிட்டால் மருந்தே விஷமாகி விடும். விஷம் என்பது “அளவிற்கு அதிகாமான அளவில் இருக்கும் மருந்து” என்பதும் மருந்து என்பது “சரியான அளவிலான விஷம்” என்பதும் மருத்துவத்தில் பால பாடம். காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், அனைத்து கடைகளிலும் கிடைக்கும் பாராசிட்டமால் மாத்திரைகளை கூட ஒரே நேரத்தில் 40 மாத்திரைகளை மொத்தமாக விழுங்கினால் மரணம் தான். உலகின் கொடிய விஷமான பொட்டுலின் விஷம் கூட குறைவான அளவில் சரியான அளவில் மருந்தாக பயன்படுகிறது. அதே போல் மருந்து என்பதை தகுந்த கால அளவில் அளிக்க வேண்டும். ஐந்து நாட்கள் மூன்று வேலை கொடுக்கவேண்டிய மருந்தை ஒரே நாள் ஒரு மணிநேர இடைவேளையில் கொடுத்தால் விளைவுகளை விட பின்விளைவுகளே அதிகமாக இருக்கும்.
எனவே தனியார்மயம், உலகமயம், தாராளமயம் ஆகியவை கூட அளவிற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டாலோ, அல்லது சமூக வளர்ச்சிக்கு போதிய கால அவகாசம் அளிக்காமல் வெகு விரைவாக கடைபிடிக்கப்பட்டாலோ அதனால் பிரச்சனைகள் வரலாம்
தற்சமயம் கொரொனாவைரசினால் உலகம் முழுவதுவும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதிலிருந்து மீண்டு வர நாம் என்ன செய்யவேண்டும் ? கடந்த 30 ஆண்டுகளாக நாம் செய்த சாதனைகள் என்ன ? நாம் செய்ய தவறுகள் யாவை ? கடந்த காலத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளவேண்டும். அடுத்த 20 ஆண்டுகள் நாம் பொருளாதாரத்தில் முன்னேற என்னசெய்யவேண்டும் ? என்ன செய்யக்கூடாது ? என்று பல கேள்விகள் நம்முன் உள்ளன.
இவற்றிற்கு விடை தேடும் நோக்கில் ஒரு நூலை எழுதலாம் என்று நினைக்கிறேன்
10) உங்களது வெற்றியின் ரகசியமாக/ பலமாக நீங்கள் எதைக்கருதுகிறீர்கள்?
எந்த போட்டி என்றாலும்
விதிமுறைகளை நன்றாக வாசிக்க வேண்டும்
நம்மால் அந்த விதிமுறைகளின் படி விளையாட முடியுமா என்று பார்க்க வேண்டும்
முடியாது என்றால் ஒன்று ஒதுங்கி நின்று விசிலடிக்கலாம்
அல்லது
வெல்ல மாட்டோம் என்று தெரிந்து கொண்டே, பங்கு பெறும் உற்சாகத்திற்காக மட்டுமே பங்கு பெற வேண்டும்
எனது வெற்றியின் ரகசியமாக / பலமாக நான் கருதுவது என்னவென்றால்
எந்த மைதானம் எனக்கு வசதியாக உள்ளதோ, எந்த விதிமுறைகள் எனக்கு சாதகமாக உள்ளதோ, அந்த போட்டியில் தான் சென்று விளையாடுவேன் 🙂