கசிவு நீரோடையும் வீராணம் குழாய்களும்

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நீரை கொண்டு செல்லவதற்கு மூன்று காரணங்கள்
1.
முதல் இடத்தில் வெள்ளம் வராமல் தடுக்க
2.
செல்லும் வழியில் இருக்கும் நீர் படுகையை உயர்த்த
3.
இறுதியில் இருக்கும் நீர் படுகையை உயர்த்த

இதில்
சில நேரங்களில் 2ஆம் நோக்கம் முதன்மையாக இருக்கும், சில நேரங்களில் 3ஆம் நோக்கம் முதன்மையாக இருக்கும். சில நேரங்களில் 2ம், 3ம் தேவைப்படும்
முதன்மை நோக்கம் 3 என்றால் நீரை குழாய்கள் மூலம் கொண்டு செல்வார்கள்
அப்படி செல்லும் போது
நீர் அனைத்தும் இறுதி இடத்திற்கு செல்லும்
நீர் போகும் வழியில் இருக்கும் நிலங்களுக்கு பலன் இருக்காது

முதன்மை நோக்கம் செல்லும் வழியில் இருக்கும் நிலங்களில் நீர் படுகையை உயர்த்துவது என்றால் இப்படி செய்வார்கள்
இதன் நோக்கம் நீர் வேகமாக ஓடக்கூடாது. செல்லும் வழியில் கீழே சென்று விடவேண்டும்
இது போன்ற கசிவு நீரோடைகளை கட்டினால் அதன் இரு புறங்களுக்கும் இருக்கும் கிணறுகளில் நீர் நன்றாக இருக்கும்

இரு நோக்கங்களும் உண்டு என்றால் அதற்கு வழக்கமான கால்வாய் போதும்