பொய்கள் புயல்போல் வீசும், ஆனால் உண்மை மெதுவாய் பேசும்

உண்மையை மறைக்கும் சொற்களை எனக்கு பிடிப்பதில்லை. நிதர்சணத்தை ஒளிக்கும் சொற்களை எனக்கு பிடிப்பதில்லை.
இடக்கரடக்கல், மென்மொழி, மறைமொழி ஆகியவை பல நேரங்களில் நன்மைகளை விட தீமைகளையே அதிகம் செய்கின்றன. ஆனால் அமெரிக்கர்களுக்கு இவை மிகவும் பிடித்தமானவையாக உள்ளன. அமெரிக்கர்களுக்கு நிதர்சணத்தை எதிர்கொள்ளவும், உண்மையை பேசவும் தயக்கம் இருப்பதால் அவர்கள் இந்த மென்மொழிகளை பயன்படுத்துகிறார்கள். இது நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே உள்ளதை அவர்கள் அறிவதில்லை.

உதாரணமாக போரில் ஈடுபடுவர்களில் மரணத்தையும், மரணங்களையும் அருகில் பார்த்தவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்படுவது உண்டு. முதலாம் உலகப்போர் காலத்தில் இதை வெடிகுண்டு அதிர்ச்சி (ஷெல் ஷாக் shell shock) என்று அழைத்தார்கள். எளிமையான இரு சொற்கள். அனைவருக்கும் புரியும். யாருக்கும் குழப்பம் வராது. ஆனால் இது உண்மையை நேரடியாக, பட்டவர்த்தமாக கூறுகிறதே. எனவே அமெரிக்கர்களுக்கு இதை தாங்க முடியவில்லை. எனவே இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஷெல் ஷாக் என்பதை போர் சோர்வு (பேட்டல் ஃபெட்டிக் battle fatigue) என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இது கேட்க நன்றாக இருந்தது. ஆனால் பாதி உண்மையை மறைத்தது. சோர்வு என்பது அதிர்ச்சி என்பதை விட குறைவான பாதிப்பு என்ற பிம்பத்தை தந்தது. அடுத்து கொரியாவில் போர் வந்த போது போர் வீரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு செயல்பாட்டு களைப்பு (ஆபரேஷனல் எக்சாஷன் Operational Exhaustion) என்று ஆனது. இது மேலும் இனிமையாக இருந்தது. ஆனால் பாதிப்பை எந்த விதத்திலும் தெரிவிக்கவில்லை. வியட்நாம் யுத்தம் முடிந்த பிறகு இந்த நிலையை பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் அல்லது பேரதிர்ச்சிக்குப் பிறகான ‎சீர்கேடு (போஸ்ட் ட்ராமட்டிக் ஸ்டெரஸ் டிசார்டர் post-traumatic stress disorder) என்று மாற்றிவிட்டார்கள். மிகக்கொடுமையான மனநோய் ஒன்று மிக அருமையான பெயர் பெற்றது. இதனால் போர் வீரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் வீரியம் பலருக்கும் புரியவில்லை. அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர்களின் வலி வார்த்தைகளின் ஜாலத்தில் அமிழ்ந்து போனது. அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை. அவர்கள் இழந்தது இந்த மென்மொழியில் கரைந்து போனது. அவர்களுக்கு உரிய பணம் கிடைக்கவில்லை. அவர்களின் இழப்பை இந்த இடக்கரடக்கல் மழுங்கடித்து அவர்களுக்கு உரிய கவனிப்பு கிடைக்கவில்லை.



இது மட்டுமல்ல, திடீரென்று ஒரு நாள் கழிவறை காகிதம் (டாய்லட் பேப்பர் toilet paper) குளியலறை திசு (பாத்ரூம் டிஷ்யூ) ஆனது. Sneakers என்பது running shoes ஆனது. பொய்ப்பல் (False teeth) என்பது பல் கருவிகள் (dental appliances) ஆனது. மாத்திரை (Medicine) என்பது மருந்துவம் செய்வது (became medication) ஆனது. தகவல் (Information) என்பது விபரத்திரட்டி உதவி (directory assistance) ஆனது.

குப்பை கொட்டுவதை (dump) நிலநிரப்பல் (landfill) என்று சொல்லி உண்மையை மறைக்கிறோம். சீருந்து மோதியது (Car crash) என்பதை வாகன விபத்து (automobile accidents) என்று மாற்றுகிறோம்.



பாதி மேகமூட்டம் (Partly cloudy) என்பதை பாதி வெயில் (partly sunny) என்றும் உந்துலாவினர் உணவகம் (Motels) என்பதை வாகன விடுதிகள் (motor lodges) என்றும் இழுவை வண்டிகளில் குடியிருப்பதை (House trailers) என்பதை நடமாடும் வீடுகள் (mobile homes) என்றும் பழைய சீருந்துகள் / செகண்ட் ஹேண்ட் கார்கள் (Used cars) என்பதை ஏற்கனவே உரிமை பெற்றிருந்த வாகனங்கள் (previously owned transportation) என்றும் அறைகளில் பரிமாறூவதை (Room service) விருந்தினர் அறையில் உண்பது (guest-room dining) என்றும் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டதன் தொடர்ச்சி தான் மலச்சிக்கல் (constipation) என்பதை அவ்வவ்போது ஏற்படும் ஒழுங்கின்மை (occasional irregularity) என்று அழைப்பது

அந்த காலத்தில் உடம்பு சரியில்லை என்றால் மருத்துவமனை (ஆஸ்பத்திரி hospital) சென்று மருத்துவரை (doctor) பார்த்தோம். இப்பொழுது நலம் பேனும் நிறுவனம் (health maintenance organization) அல்லது சுக நிலையம் (wellness center) சென்று சுகாதார சேவை வழங்கும் பணியாளரை பார்க்க சொல்கிறார்கள் (healthcare delivery professional)



ஏழைகள் குடிசையில் வசித்தார்கள் என்பது இன்று பொருளாதார ரீதியாக பின்னடைவில் உள்ளவர்கள் தரமற்ற வீடுகளில் வசிக்கிறார்கள் (economically disadvantaged occupy substandard housing) என்று மாறியுள்ளது. அத்துடன் இந்த பிரச்சனையின் வீரியமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான தீர்வுகள் மெதுவாகின்றன.

நிறுவனம் திவாலாகி அவரை பணியில் இருந்து நீக்கியதால் அவரிடம் பணம் இல்லை. இதை நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைப்பதில் என்ன பலன். அவரிடம் பணம் இல்லை என்பதை அவர் எதிர்மறை பண பரிவர்த்தனை நிலையில் (negative cash-flow position) உள்ளர் என்று சொல்லி அவருக்கு வரும் உதவிகள் குறைகின்றன

பணியில் இருந்து நீக்கப்பட்டார் (fired) என்று சொல்லாமல் மனிதவள மேம்பாடு பகுதியில் இருக்கும் மிகைமைகளை குறைக்க நிர்வாகம் முடிவெடுத்ததால் (management wanted to curtail redundancies in the human resources area) அவர் தற்சமயம் வேலையாளாக இல்லை (no longer viable members of the workforce) என்று சொல்வதால் அவருக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புகள் குறைகின்றன

அற்பத்தனமாக பெருமிதப்பட்டுக்கொள்கிற முதலாலித்துவ நபர்கள் இது போன்ற சொற்களை கண்டுபிடித்து பயன்படுத்தி தங்களின் பாவங்களை மறைத்துக்கொள்கிறார்கள்



சிஐஏ (CIA) யாரையும் கொல்வதில்லை (kill). அவர்கள் மக்களை செயலிழக்க வைக்கிறார்கள் (neutralize people – உயிர் போனால் செயலிழப்பு தானே) அல்லது அந்த பகுதியில் மக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள் (depopulate the area). ஆனால் கொல்வதில்லை (kill) !!

அதே போல் அரசு பொய்(lie) சொவ்ல்வதில்லை. அவர்கள் தகவல்களை மாற்றுகிறார்கள் (engages in disinformation) அணுகுண்டினால் ஏற்படும் பாதிப்புகளை பெண்டகன் சன்ஷன் யூனிட் என்பதை வைத்து அளக்கிறது. நம் நாடு கொலைகாரர்களுக்கு கமாண்டோக்கள் என்று பெயர். அடுத்த நாட்டு கமாண்டோக்களுக்கு தீவிரவாதிகள் என்று பெயர்.

காசுக்கு கொலை செய்பவர்கள் (Contract killers) சுதந்திர போராட்ட வீரர்கள் (freedom fighters) என்று அழைக்கப்படுகிறார்கள்.

காவல்துறையினர் (crime fighters) குற்றங்களை எதிர்க்கிறார்கள். தீயணைப்பு துறையினர் (fire fighters) தீயை எதிர்த்து போராடுகிறார்கள். இந்த காசுக்கு கொலை செய்பவர்கள் சுதந்திரத்தை எதிர்த்து தானே போராடுகிறார்கள்.