தொழிற்நுட்பமும் தொழிற்சங்களும்- 1990களின் நிகழ்ந்த மாற்றங்கள்

1990களில் இந்தியாவில் Hire and Fire நடைமுறை வந்தது. அதன் பிறகு Outsourcing / Contract (ஒப்பந்தப்பணி) ஆகியவை வந்தன

இதன் பின்னால் இருக்கும் முக்கிய காரணி – Technology அல்லது தொழிற்நுட்பம்

-oOo-

முன் காலங்களில் ஒரு வேலையை செய்ய நிறைய திறமை, நிறைய அனுபவம் தேவைப்பட்டது.

அல்லது / மற்றும்

நீண்ட கால அனுபவம் உள்ளவர் செய்வதற்கும், குறுகிய காலம் அனுபவம் உள்ளவர் செய்வதற்கும் வித்தியாசம் நிறைய இருந்தது

எனவே நீண்ட கால அனுபவம் உள்ளவர்கள் தேவைப்பட்டார்கள்.

ஆனால் தொழிற்நுட்பம் வளர வளர,
தேவைப்படும் அனுபவம் குறைந்தது
அல்லது / மற்றும்
நீண்ட கால அனுபவம் உள்ளவர் செய்வதற்கும், குறுகிய காலம் அனுபவம் உள்ளவர் செய்வதற்கும் வித்தியாசம் குறைந்தது

-oOo-

உதாரணமாக மருத்துவமனை மருந்தகத்தில்அந்த காலத்தில் Compounder என்று ஒருவர் இருந்தார். அப்பொழுது மருந்தகத்தில் (Pharmacy) மருந்துகள் செய்யப்பட்டன.

Mixtures, Lininment, Ointment, Cream எல்லாம் அங்கு செய்யப்பட்டன. எனவே அதற்கு அனுபவம் தேவை.

புதிதாக வருபவர் செய்யும் Ointment mixture போல் வரும் ரிஸ்க் இருப்பதால் நிறுவனங்கள் அனுபவம் மிக்க மருந்தாளுனர்களை இழக்க விரும்ப மாட்டார்கள். எனவே நிரந்திர பணி அளித்தார்கள்.

ஆனால் இன்று அனைத்தும் Blister pack, tubeகளில் வருகின்றன. எனவே மருந்தாளுனரின் வேலை என்பது செஷ்பில் இருந்து எடுத்து கொடுப்பது தான். எனவே பணி நிரந்தரம் இல்லை

அதே போல்
முன் காலங்களில் ஆய்வகங்கள் ஒவ்வொரு பரிசோதனையையும் தனியா செய்ய வேண்டும்

இப்பொழுது Semi Auto Analyser வந்து விட்டது. பல பரிசோதனைகள் Card Test / Rapid Kit ஆக வந்து விட்டன.

எனவே அனுபவத்தின் மதிப்பு குறைந்துள்ளது

-oOo-

மலேரியாவை கண்டு பிடிக்கும் ஆய்வக நுட்பனர் பணி என்பது நிரந்தர பணியாக உள்ளது. காரணம் இது அனுபவம் தேவைப்படும் வேலை

எய்ட்ஸ் சிகிச்சை பிரிவில் இருக்கும் ஆய்வக உதவியாளர் ஒப்பந்த பணியில் உள்ளார். இது சில நாட்கள் பயிற்சி பெற்றால் போதும்

-oOo-

ஒப்பந்த பணியால் வேறு பல பிரச்சனைகள் உள்ளன. அதை நான் முழுவதும் ஆதரிக்கவில்லை. அது வேறு விஷயம் – அது குறித்து தனியாக பேசலாம்

இங்கு கூறவரும் விஷயம் என்னவென்றால்
When technology has replaced your skill, you have lost your bargaining power

-oOo-

1990கள் வரை நிறுவனங்களின் இன்றியமையாத பங்காக தட்டச்சர்கள் இருந்தார்கள். ஏன் ? நிறைய கடிதங்களை விரைவாக அடிக்கவேண்டும். தவறில்லாமல் அடிக்கவேண்டும்

ஆனால் கணினி வந்த பிறகு தவறுகளை திருத்தும் வாய்ப்பு வந்த பிறகு “தவறில்லாமல் அடிப்பது” என்ற திறமைக்கு மதிப்பில்லை

-oOo-

சுவரில் படம் வரைபவர்களின் வேலையை போட்டோஷாப் + கோரல்டிரா + ப்ளெக்ஸ் பிரிண்டிங் பறித்தது

செயற்கை நுண்ணறிவு வந்து பழைய படத்தை சீரமைக்கும் திறமை சாலிகளின் வேலையை பறிக்கும். இந்த படத்தை பாருங்கள்.


(மூலம் : https://www.facebook.com/chithranraghu/posts/10227921004110055
மென்பொருள் : https://github.com/TencentARC/GFPGAN & https://replicate.com/xinntao/gfpgan)

2000களின் ஆரம்பம் முதல் இன்று வரை மிக அதிகமாக தேவைப்படும் ஒரு திறமை (பழைய படங்களை புதுப்பிற்பது) இனி பின்னால் சென்று விடும்

-oOo-

எனவே
நிரந்தர பணி x ஒப்பந்தப்பணி
குறித்த உரையாடல்களில்
உலகவங்கி, காட் என்று மட்டும் ஜல்லியடித்துவிட்டு
தொழிற்நுட்பத்தின் பங்கு குறித்து பேசவில்லை என்றால்
அது முழுமையாகாது

-oOo-

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் இருக்கும் தொழிற்சாலைகள் உருப்படுவதில்லை
காங்கிரஸ், திமுக தொழிற்சங்கங்கள் பலமாக இருக்கும் தொழிற்சாலைகள் தப்பிக்கின்றன
காரணம் என்ன தெரியுமா ?

-oOo-

இதற்கு செல்லவதற்கு முன்னர் இந்த கோப்பை வாசியுங்கள்

சிகிச்சையில் முக்கியம்
1. அந்த சிகிச்சை இருக்கவேண்டும்
2. அந்த சிகிச்சை நம் அருகில் இருக்கவேண்டும்
3. அந்த சிகிச்சை நம் அருகில், நம்மால் வாங்கக்கூடிய விலையில் இருக்கவேண்டும்
4. அந்த சிகிச்சை நம் அருகில், நம்மால் வாங்கக்கூடிய விலையில், தரத்துடன் இருக்கவேண்டும்

இதில் முதலில் தேவை – இருப்பது
அடுத்த முக்கியம் – அருகில் இருப்பது
அடுத்த முக்கியம் – வாங்கும் விலையில் இருப்பது
அடுத்த முக்கியம் – தரமாக இருப்பது

மிக அதிகமான தரமாக உள்ளது, ஆனால் வாங்கும் விலையில் இல்லை என்றால் பலனில்லை
மிக அதிகமான தரமாக உள்ளது, ஆனால் அருகில் இல்லை என்றால் பலனில்லை
எனவே எப்பொழுதும் Order of Priority முக்கியம்

-oOo-

ஊதியம் அவசியம்
அதை விட தொழிலாளர் நலன் அவசியம்

இவர் இரண்டும் எப்பொழுது அவசியம் ?
அந்த தொழிலாளி வேலையில் இருந்தால் தானே இவை இரண்டிற்கும் அர்த்தம் உண்டு
வேலையில் இல்லை என்றால் அதிக ஊதியம் என்ற கோரிக்கையால் ஏதாவது பலன் உண்டா ?

தொழிலாளி வேலையில் இருக்கவேண்டும் என்றால் எது அவசியம் ?
தொழிலாளி வேலையில் இருக்கவேண்டும் என்றால் அந்த தொழிற்சாலை, நிறுவனம் இயங்கவேண்டும்

எனவே
முதல் தேவை – தொழிற்சாலை இயங்கவேண்டும்
அடுத்த தேவை – நமக்கு (தொழிலாளிக்கு) வேலை வேண்டும்
அடுத்த தேவை – நமது அடிப்படை உரிமை + பாதுகாப்பு வேண்டும்
அடுத்த தேவை – ஊதிய உயர்வு வேண்டும்

-oOo-

காங்கிரஸ், திமுக தொழிற்சங்கங்கள் இந்த கருத்தில் தெளிவாக இருப்பார்கள்
ஊழியரின் உடல் நலத்திற்கோ, உயிருக்கு ஆபத்து என்ற நிலை எற்பட்டால் தவிர அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு படமாட்டார்கள்
மீதி பிரச்சனைகளை ”பேசியே தீர்த்துக்கொள்வார்கள்”
லாக் அவுட் போன்ற விஷயங்களினால் தொழிற்சாலைக்கு நஷ்டம் என்றால் அது ஊழியர்களை பாதிக்கும் என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள்

-oOo-

கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களை பொருத்தவரை
அவர்களுக்கு போராட்டம் தேவை
அதனால் ஊழியருக்கு வேலை போனாலும் பரவாயில்லை (விடுங்க பாஸ், கோர்ட்டில் போய் வாங்கிக்கலாம்)
அதனால் தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டாலும் பரவாயில்லை (விடுங்க பாஸ், லேபர் டிபார்ட்மெண்டில் பேசி செட்டில்மெண்ட் வாங்கலாம்)
என்று தான் இவர்களின் செயல்பாடு இருக்குமே தவிர
அவர்கள் சங்கம் வளர்ப்பது தான் அவர்களின் நோக்கமாக இருக்கும் தவிர
ஊழியர் நலன் துளியும் இருக்காது
இது தான் என் அனுபவம்

-oOo-

ஆமை புகுந்த வீடும்
கம்யூனிஸ்ட் புகுந்த தொழிற்சாலையும்
உருப்பட்டதாக சரித்திரமே இல்லை