பொன்னியின் செல்வன் : வரலாறு, என்ன நடந்திருக்கும் என்ற ஊகம், கல்கி என்ன சொல்லியுள்ளார்

பொன்னியின் செல்வன் :

முதலில் வரலாறில் உள்ளவை
அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற ஊகம்
இறுதியில் கல்கி என்ன சொல்லியுள்ளார்
என்று பார்போம்



(I) வரலாறு

இடைக்காலச்சோழர்களின் காலம் விஜயாலய சோழரில் இருந்து துவங்குகிறது. விஜயாலய சோழர் 848ல் இருந்து 870 வரை ஆள்கிறார். அவருக்கு பிறகு அவரது மகன் ஆதித்ய சோழர் (இவர் தான் ஆதித்ய சோழன் I) I 871 முதல் 907 வரை அரசாள்கிறார். ஆதித்திய சோழரின் மகன் பராந்தக சோழர். இவர் 907 முதல் 955 வரை 48 ஆண்டுகள் அரசராக உள்ளார்.
பராந்தக சோழருக்கு மூன்று மகன்கள்

  1. ராஜாதித்ய சோழன்
  2. கண்டராதித்ய சோழன்
  3. அரிஞ்சய சோழன்

-oOo-

இதில் ராஜாதித்ய சோழர் தான் பட்டத்து இளவரசர். ஆனால் தக்கோலப்போரில் 1948லேயே இறந்துவிட்டார் (இன்று அரக்கோணம் அருகில் இருக்கும் சிறு ஊர் தக்கோலம்). போரில் யானை மேல் இருக்கும் போது கொல்லப்பட்டதால் இவருக்கு யானை மேல் துஞ்சிய தேவர் என்று பெயர்.

பராந்தக சோழரின் இரண்டாவது மகனான கண்டராதித்ய சோழரின் மனைவி செம்பியன் மாதேவி (இவர் மலவரையர் என்ற சிற்றரசரின் மகள்). இவர்களுக்கு மதுராந்தக உத்தம சோழன் என்று ஒரு மகன் உள்ளார். ஆனால் அவர் வயதில் இளையவர். அனேகமாக கண்டராதித்யரின் முதுமையில் பிறந்திருக்கவேண்டும்.

பராந்தக சோழரின் மூன்றாவது மகனான அரிஞ்சய சோழனின் மனைவி கல்யானி கர்நூலை சேர்ந்தவர். இவர்களின் மகன் பராந்தக சோழன் -II அல்லது சுந்தர சோழன் அல்லது பராந்தக சுந்தர சோழன்.
சுந்தர சோழனின் மனைவி திருக்கோவிலூர் மலைமானின் மகள்.

கண்டராதித்ய சோழர் இறைபணியில் விருப்பமாக உள்ளார்.
எனவே பராந்தகரின் ஆட்சிக்காலத்தில் காலத்தில் அவர் பட்டத்து அரசராக இருக்கும் போதே (950-955) பெரும்பாலான அரசு பணிகளை .அரிஞ்சய சோழன் செய்கிறார். 955ல் பராந்தகர் இறந்த பிறகு அரசராகிறார். ஒரே வருடத்தில் இறந்து விடுகிறார்.

956ல் கண்டராதித்ய இறந்தபோது உத்தமசோழனுக்கு வயது மிகக்குறைவு என்பதால் அவரை அடுத்து 956ல் அரிஞ்சய சோழன் அரசராகிறார்.

அவரும் ஒரு வருடத்தில் இறந்து விடவே, அப்பொழுதும் கூட உத்தம சோழனின் வயது குறைவு என்பதாஅரிஞ்சய சோழரை  தொடர்ந்து அவரது மகன் சுந்தர சோழன் 957ல் அரசராகிறார். சுந்தர சோழருக்கு மூன்று குழந்தைகள்

    1. 1. ஆதித்ய கரிகாலன் அல்லது ஆதித்யன் II
    2. 2. குந்தவை
    3. 3. அருண்மொழி – பின்னர் ராஜ ராஜ சோழன்

சுந்தர 12 வருடங்கள் அரசாள்கிறார். அந்நேரம் 969ல் அவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது

இந்நிலையில் அடுத்த அரசன் யார் என்று கேள்வி எழுகிறது

அரிஞ்சய சோழனும், சுந்தர சோழனும் அரசராகும் போது மதுராந்தக உத்தம சோழனுக்கு வயது குறைவு
எனவே அவர் அரசனாக முடியவில்லை
ஆனால்
சுந்தரசோழனுக்கு பக்கவாதம் வரும் போது மதுராந்தக உத்தமசோழன் வளர்ந்து பெரியவனாகிவிட்டார்
எனவே அவருக்கு இப்பொழுது ஆசை அதிகம்

இது மட்டும் பிரச்சனை அல்ல
செம்பியன் மாதேவியின் தந்தைக்கு அவரது பேரனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்
செம்பியன் மாதேவியின் சகோதரருக்கு அவரது மருமகனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்
திருக்கோவிலூர் மலைமானுக்கு அவரது பேரனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்
அவரது மகன், தற்பொழுதைய சிற்றரசருக்கு அவரது மருமகனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்

எனவே
சுந்தர சோழருக்கு பக்கவாதம் ஏற்பட்ட போது நடந்த வாரிசு பிரச்சனை என்பது
வெறும் அரண்மனை யுத்தம் மட்டுமல்ல
அது
சோழ பேரசரின் சிற்றரசுகளுக்கு இடைய நடந்த ஈகோ யுத்தம்

(650 ஆண்டுகள் கழித்து டெல்லியிலும் ஆக்ராவிலும் இதே தான் ஜாஹாங்கீர், குஸ்ரூ விஷயத்திலும் நடந்தது. இருவரின் மாமாவும், தாத்தாவவும் சேர்ந்து தூபம் போட்டு, தந்தையையும் மகனையும் மோதவிட்டார்கள்
அந்த காலத்தில் அரசர்கள் படை திரட்டி வருகிறார்கள் என்று படித்திருப்போம். எப்படி திரட்ட முடியும், ஏது பணம் என்று பார்த்தால், இந்த தாத்தா, தாய்மாமன், மாமனார இருக்கும் பிற சிற்றரசர்களின் வேலை தான் அது. இது குறித்து இந்த நூலில் வாசிக்கலாம் )

இந்த நிலையில்
ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்படுகிறார். யார் கொன்றார்கள் என்று தெளிவான சரித்திரம் இல்லை
ஆதித்ய கரிகாலன் கொல்லப்படும் போது ராஜ ராஜ சோழன் இலங்கையில் உள்ளார்
அவரை அழைத்து வந்து அரசனாக்க வேண்டும் என்று அவரது தாத்தா, தாய்மாமன், மாமனார் சிற்றரசர்கள் + அவரது அக்கா குந்தவை முயல்கிறார்கள்
அதை தடுக்க மதுராந்தக உத்தம சோழனின் தாத்தா, தாய்மாமன், மாமனார் சிற்றரசர்கள்  முயல்கிறார்கள்

ஆதித்ய கரிகாலனின் மரணத்தால் எழுந்த அனுதாப அலையால் மக்கள் ஆதரவு ராஜராஜ சோழனுக்கு பெரிதாக உள்ளது
ஆனால் அவர் அரசராக வில்லை. சிம்மாசனத்தை தனது சித்தப்பாவிற்கு தியாகம் செய்கிறார்
எனவே மதுராந்தக உத்தம சோழன் 970ல் சோழ அரசராகிறார்

இந்த நேரத்தில் ராஜ ராஜன் தோழர் படை தளபதியாகிறார்
சோழ ராஜ்யத்தை விரிவுபடுத்துகிறார்

985ல் மதுராந்தக உத்தமசோழன் மரணமடைகிறார். அவருக்கு மதுராந்தக கண்டராதித்யா என்று ஒரு மகன் இருந்தாலும்,
அதன் பிறகு சோழ சிம்மாசனம் ராஜ ராஜ சோழனின் வாரிசுகளுக்குத்தான் வருகிறது
985-1014 30 வருடங்கள் ராஜராஜசோழன்
1014-1044 30 வருடங்கள் ராஜேந்திர சோழன்
1044-1054 ராஜாதிராஜ சோழன்
1054-1059 இரண்டாம் ராஜேந்திர சோழன்



-oOo-

(II) என்ன நடந்திருக்கும் என்ற ஊகம்

ஆதித்ய சோழன் பெரிய போர் வீரன்.
அதனால் அந்த திமிர் இருந்திருக்கவேண்டும்

மதுராந்தக உத்தம சோழன் அரண்மனைக்குள்ளேயே வளர்ந்தவன்
அதனால் சிற்றரசர்களை மிகவும் மரியாதையாக நடத்தியிருப்பார்

எனவே பெரும்பாண்மையான சிற்றரசர்கள் மதுராந்தகன் தான் “நமக்கு ஏற்ற பீசு” என்று முடிவு செய்து மதுராந்தக உத்தம சோழனை ஆதரித்திருப்பார்கள்
அது தவிர
அவர்தான் பராந்தக இரண்டாது மகனின் மகன்
ஆதித்ய கரிகாலன் மூன்றாவது மகனின் பேரன் தான்

எனவே இந்த சிற்றரசர்கள் எல்லாம் சேர்ந்து போட்டு தள்ளிவிட்டார்கள்

ஆனால்
அதன் பிறகு மக்கள் அனுதாபம் ராஜராஜசோழன் பக்கம் திரும்பியது அவர்கள் எதிர்பாராது

ஆனால்
ராஜராஜன் புத்திசாலி

மக்கள் அனுதாபம் மட்டும் இருந்தால் போதாது
சிற்றரசர்களின் ஆதரவு வேண்டும் என்று புரிந்து கொண்டிருக்கவேண்டும்
அன்று அவர் சிம்மாசனம் ஏறியிருந்தால்

  1. மதுராந்தக உத்தம சோழனால் தொல்லை/li>
  2. சிற்றரசர்களினால் தொல்லை
  3. மேற்றே சேரன், வடக்கே சாளுக்கியன், தெற்கே பாண்டியனால் தொல்லை

இவர் போருக்கு சென்றால் இங்கே அரண்மனை காலி
எனவே
மிகவும் திறமையாக உத்தம சோழனை அரசராக்கி விட்டு அவர் படைதளபதியாகிவிட்டார். (யுவராஜவாக கூட ஆகவில்லை). 970ல் அவருக்கு 23 வயது

தளபதி ஆகி போர் எடுத்து சென்று எல்லைகளை விரிவாக்கி எல்லையில் பிரச்சனை இல்லை என்ற நிலைக்கு கொண்டுவருகிறார்
சிற்றரசர்களின் ஆதரவை பெருகிறார்
அதன் பிறகு 985ல் மதுராந்தக உத்தமசோழன் இறந்த பிறகு
38ஆம் வயதில் சோழப்பேரரசராக முடி சூட்டிக்கொண்டு 29 ஆண்டுகள் அரசாள்கிறார்
67ஆம் வயதில் இறந்து விடுகிறார்



-oOo-

(III) கல்கி என்ன சொல்லியுள்ளார்

சுந்தர சோழருக்கு பக்கவாதம் ஏற்படுவதில் இருந்து
ராஜராஜன் சிம்மாசனத்தை தியாகம் செய்வது வரை
நடக்கும் நிகழ்ச்சிகளை கற்பனை கலந்து 6 பாகமாக (5 பாகம் தான். ஒன்று பெரிது) எழுதியது கல்கியின் சாதனை

மேலே கூறியவர்கள் தவிர
கல்கியின் கதையில் மேலும் சில கற்பனை கதாபாத்திரங்கள் வருகின்றன

  1. நந்தினி
  2. சேந்தன் அமுதன்
  3. பூங்குழலி
  4. வாணி அம்மாள்
  5. மந்தாகினி
  6. முருகையன்
  7. ஆழ்வார்கடியன் நம்பி

வாணி அம்மாள் மந்தாகினியின் சகோதரி. இந்த இரு சகோதரிகளின் சகோதர் குழந்தைகள் தான் பூங்குழலி மற்றும் முருகையன்

வாணி அம்மாவின் வளர்ப்பு மகன் – சேந்தன் அமுதன் (கதைப்படி செம்பியன் மாதேவியின் புதல்வன் – பிற்காலத்தில் உத்தம சோழன்)

மந்தாகினியின் குழந்தைகள் – நந்தினி மற்றும் ஆரம்பத்தில் வரும் உத்தம சோழன் (கதைப்படி இவர் தான் ஆதித்ய கரிகாலனை கொல்பவர். ஆதித்ய கரிகாலனை கொன்ற உத்தம சோழனை ராஜராஜன் அரசனாக்கினால் அது தியாகம் இல்லையே. . . அது கோழைத்தனம் அல்லவா . .எனவே உத்தமச்சோழன் பாத்திரத்தை இரண்டாக பிரித்து

  • ஒன்று மந்தாகினின் குழந்தை – அவன் வில்லன்,
  • ஒன்று செம்பியன் மாதேவியில் மகன் – அவன் நல்லவன் என்று கல்கி ஆக்கிவிட்டார்

வாணி அம்மாள் – மந்தாகினியின் சகோதர் குழந்தைகள் தான்
பூங்குழலி மற்றும் ராக்கையன்