டிஜிட்டல் ஆர்ட் : நவீனத்துவத்திற்கு அடுத்த காலக்கலை கணினி இனைய கால கலை

பின் நவீனத்துவம் என்றால் என்ன ?
பிற கலைவடிவங்கள் யாவை ?
Post Modernism என்பதை பின் நவீனத்துவம் என்று மொழி பெர்த்தது சரியா ?
என்று அறிய முதலில் இந்த கானொளியை பார்க்கவும்

உலகெங்கும் கலை என்பது ஒருபக்கம் மன்னர்களிடம் வாங்கி தின்றது (மைக்கேல் ஏஞ்சலோ முதல் கம்பன் வரை அரசர்களின் / வியாபாரிகளில் தயவில்தான் இருந்தார்கள்). அதே கலை என்பது மறுபக்கம் ஆளும் வர்க்கத்தை, பணக்காரர்களை கேள்வி கேடடது (மைக்கேல் ஏஞ்சலோ இரண்டையும் செய்தார். அவரது படைப்பு ஓவியம் குறித்து இந்த காணொளியை பார்க்கவும்). கலை என்பது சமூக வரலாற்றை, அறிவியல் வளர்ச்சியை, பொருளாதாரத்தை உள்வாங்கியது, செழுமைப்படுத்தியது

கலைவடிவங்கள் என்பது வரலாற்றுடனும், அறிவியலுடனும் நெருங்கிய தொடர்பு உடையவை. நான் ஏற்கனவே காணொலியில் கூறியிருந்தபடி, பண்டைய கால கலை என்பது ரோமேனிய பேரரசு உச்சத்தில் இருந்த போது இருந்த கலை. அதற்கு அடுத்த 1000 வருடம் இருண்ட காலத்தில் அதற்கேற்ற கலை வடிவம் இருந்தது. மறுமலர்ச்சி என்பது மீண்டும் ஐரோப்பியவில் செல்வம் செழிக்கும் போது வந்தது. நவீன ஓவியம் என்பது புகைப்பட கருவி கண்டுபிடிக்கப்பட்ட போது வந்தது-oOo-

நவீனத்துவத்திற்கு அடுத்த காலக்கலையில் (Post Modernism) Skepticism, Irony, Philosophical critiques ஆகியவை முக்கிய கூறுகள். இதில்

  • Skepticism என்பது நம்பிக்கையில்லாமல் இருப்பது. அதாவது தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்துவது
  • Irony என்பது முரண் நகை
  • Philosophical critiques என்பது தத்துவ விமர்சனம்

இந்தெ மூன்று விஷயங்களையும் புரிந்து கொள்ளவேண்டும் என்றால் நீங்கள் உலகவரலாற்றுடன் அவற்றை இணைத்து பார்க்க வேண்டும்
1960களில் பனிப்போர் உச்சம் அடைந்த சமயம், வியட்நாம் போரில் அமெரிக்கா மூக்குடைபட்ட போது

  • பெருசா சுதந்திரம், சமத்துவம் என்று சொல்லிக்கொண்டு வியட்நாமில் என்ன புடுங்குற என்று அமெரிக்காவையும் ?
  • ரஷ்யா தனது பிற நாடுகள் மீது உருசிய மொழியை திணிக்க முற்பட்ட போது, பொதுவுடமைன்னு சொல்லிக்கிட்டு ஏன் உக்ரேனிய மொழியை அழிக்கிறாய் என்று ரஷ்யாவின் ஆளும் பொதுவுடமை கட்சியையும்,
  • கடவுளை நம்பும் நீங்கள் அனைவருக்கும் உணவும் கல்வியும் மருத்துவமும் அளிக்காமல் ஆயுதம் வாங்குகிறீர்களே என்று ஐரோப்பியர்களையும்

கேள்வி கேட்டது தான் Skepticism. இவர்களின் மேல் உள்ள அவநம்பிக்கையில் வெளிப்பாடே Skepticism

உன் கொள்கைக்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்லையே ? முரணாக உள்ளதே என்றது Irony. இவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதே முரண்நகை Irony

இந்த பனிப்போர் என்பது அதிகாரம் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து நடந்த போது, ஐரோப்பாவில் மதக்கோட்பாடுகள் பின்னால் தள்ளப்பட்டன, அமெரிக்காவில் முதலாளித்துவ கோட்பாடுகள் பின்னால் தள்ளப்பட்டன, ரஷ்யாவில் பொதுவுடமை கோட்பாடுகள் பின்னால் தள்ளப்பட்டன. இவை அனைத்தையும் விமர்சிக்கவேண்டும் என்பதே தத்துவ விமர்சணம் Philosophical critiques

நாம் ஏற்கனவே பார்த்தபடி உலகெங்கும்

  • கலை என்பது ஒருபக்கம் மன்னர்களிடம் வாங்கி தின்றது
  • கலை அடுத்த பக்கம் ஆளும் வர்க்கத்தை, பணக்காரர்களை கேள்வி கேட்டது. அதன் மூலம் கலை என்பது சமூக வரலாற்றை, அறிவியல் வளர்ச்சியை, பொருளாதாரத்தை உள்வாங்கியது, செழுமைப்படுத்தியது

மைக்கேல் ஏஞ்சலோ எப்படி கேள்வி கேட்டார் என்று அறிய இந்த காணிளியை பார்க்கவும்

எனவே, 1970களில் அதிகார வர்க்கத்தையும், பெருநிறுவனங்களையும் கேள்வி கேட்க முனைந்ததே நவீனத்துவத்திற்கு அடுத்த கால கலை

ஆனால் தமிழகத்தில் மட்டுமே இந்த் போஸ்ட்மாடர்னிச பேர்வழிகள்

  • சமூகம், அறிவியல், பொருளாதாரம், வரலாறு, ஆட்சி என்று புறத்தினையை வேண்டுமென்றே பின் தள்ளி
  • அகவொளி தரிசனம், காதல், திருமணம் தாண்டிய உறவுப்பிரியர்கள் !, என்று அகத்தினையை முன் வைத்து

1980கள் முதல் 2020 வரை இருந்த ஒரு தலைமுறையை intellectual castration செய்து விட்டார்கள்.-oOo-

வரலாறும் பொருளாதாரமும் விஞ்ஞானமும் கலை வடிவத்தை மாற்றிக்கொண்டே வரும். ஆனால் இந்த மாற்றம் என்பது ஒரே நாளில், நாம் நமது செல்லிடப்பேசியில் (Mobile Phone) செயலிகளை (App)  மாற்றுவதை போல் ஒரேநாளில் நடக்காது. பல ஆண்டுகள், சில தசாப்தங்கள் ஆகலாம். அப்படி மாறும் போது சில இடைமாறுபாட்டு கலைவடிவங்களும் (Transition Arts) வரும்.

திரைப்படம் வந்தவுடன் நாடகங்களைத்தான் திரையில் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதாவது நாடகக்கலை திரையில் வந்தது. பிறகு தான் திரைப்படம் திரையில் வந்தது. பாரதிராஜா தான் மாற்றினார். அதன் பிறகு பாக்கியராஜ் திரைக்கதை என்பதை முதன்மை படுத்தினார். மணிரத்னம் வந்த பிறகு அது காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஷங்கர் வந்த பிறகு பிரமாண்டம் என்று ஆனது

எந்த ஒரு நவீன கருவியையும் நாம் பயன்படுத்த ஆரம்பிக்கும் போது அதற்கான கலைவடிவம் உடனே வளராது முதலில் அது முந்தைய வடிவத்தில் தான் இருக்கும்

முதலில் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றை நாம் எப்படி பயன்படுத்தினோம் என்று பார்க்கலாம் முதலில் வானொலியை பயன்படுத்தினோம் பிறகு தொலைக்காட்சி வந்தது. ஆனால் தொலைக்காட்சி வந்த புதிதில், அதாவது 1980களில் நாம் தொலைக்காட்சியை எப்படி பயன்படுத்தினோம் என்பதை நினைத்து பார்க்கலாம்

1980களில் தொலைக்காட்சிகளில் இருந்த பெரும்பாலான நிகழ்ச்சிகள் – வயலும் வாழ்வும், எதிரொலி போன்றவை – எப்படி இருந்தன . அவை வானொலி நிகழ்ச்சிகளே வெள்ளி மாலை “ஒலியும் ஒளியும்” மற்றும் ஞாயிறு மாலை திரைப்படம் தவிர மீதி பெரும்பாண்மையான நிகழ்ச்சிகள் வானொலி நிகழ்ச்சிகள் போலவே இருந்தன

அதாவது

வானொலியை விட தொலைக்காட்சியில் அதிக வசதி இருந்தும், தொலைக்காட்சி அறிமுகமான புதிதில் அதை நாம் வானொலி போலவே பயன் படுத்தி வந்தோம். தொலைக்காட்சியின் முழுப்பயன்களை பயன் படுத்த நமக்கும் பல ஆண்டுகள் ஆகின. வானொலி பயன்படுத்திய நாம் தொலைக்காட்சி கிடைத்த உடன் அதன் முழு பயன்களையும் பயன்படுத்தவில்லை. அதை வானொலியாகவே பயன் படுத்தினோம்

அடுத்த உதாரணம் தட்டச்சு கருவி, கணினி. 1990களில் இந்தியாவில் கணினி அறிமுகமானது. அடுத்த பத்தாண்டுகளில் அது வெறும் தட்டச்சு கருவியாகத்தான் பயன்பட்டது. Mail Merge போன்ற வசதிகளை கூட பயன் படுத்தியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 99 1990களில் சதவித கணினிகளில் தட்டச்சு தவிர பிரிண்ஸ் ஆப் பெர்சியா, டிக்கர், கார் பந்தயம் ஆகிய விளையாட்டுக்களை விளையாடினார்கள். அவ்வளவு தான் !!

தட்டச்சு கருவியை விட அதிக வசதிகள் இருந்தும், ஆரம்ப காலகட்டத்தில் நாம் கணினியை தட்டச்சு கருவியாகவே பயன் படுத்தி வந்தோம். கணினியின் முழுப்பயன்களை பயன்படுத்த நமக்கு பல ஆண்டுகள் ஆகின

தட்டச்சு கருவி பயன்படுத்தி பழகிய நாம், கணினி கிடைத்தவுடன் அதன் முழுப்பயன்களையும் பயன்படுத்த வில்லை. அதை தட்டச்சு கருவியாகவே பயண் படுத்தினோம்

சின்னத்திரை வந்த போது, 1980களில்ச்சில தொடர்கள் சினிமா போல் இருந்தன சில நாடகம் போல் தான் இருந்தன. 1990களில் நடுவில் வந்த சாந்தியும், இறுதியில் மர்மதேசம் போன்ற தொடர்கள் தான் சின்னத்திரையில் கூறுகளை அடைந்தது.

அதே போல் தமிழும் அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளது.
கீழே E=mc² என்ற பௌதீக சமன்பாட்டை ஒரு வகையாக எழுதியுள்ளேன். ஒரே விஷயத்தைத்தான் எழுதியுள்ளேன். முன்னது 1970கால கட்ட இலக்கிய நடை. பின்னது நவீன கணினி இனைய கால இலக்கிய நடை. இதில் எது உங்களுக்கு புரிகிறது

1
ஓய்வில்லாத நிரந்திர பிரபஞ்ச பெருவெளியில் அசைந்தும் அசையாமலுமிருக்கும் அனைத்து பொருட்களினுள் ஆற்றல் அடங்கியுள்ளதென்று ஐண்ஸ்டைன் தனது ஆற்றல்-திணிவு சமன்பாட்டில் கூறிய கூற்றானது ஆர்க்கிமிடிசில் இருந்து கலிலி வழி நியூட்டன் ஈறாக வந்த பௌதீக ஞான மரபு சிந்தைகளை கட்டுடைத்து அதன் பிறகு அதுகாறும் இருந்த வெளி மற்றும் காலம் (time) பற்றிய நெடிதிருந்த கருத்துகளை நிராகரித்து மிகப்பரந்த அளவில் அறியப்பட்ட கணித, இயற்பியல் சமன்பாடாக தன்னை உருமாற்றிக்கொண்டது

2
எந்த ஒரு பொருளிலும், அந்த பொருளின் எடைக்கு ஏற்ப சக்தியும் அடங்கியுள்ளது. அந்த சக்தியை அளவிடவும் முடியும் என்று ஐண்ஸ்டைன் கூறினார்
#டிஜிட்டல் இலக்கியம்

நவீனத்துவத்திற்கு அடுத்த கால கட்ட கலை என்பது வேறு. கணினி இனைய கால கலை என்பது வேறு. நவீன கால கட்ட படைப்பு என்பது மின்னனு கருவில் வருவதாலேயே அது இணைய கால கலைப்படைப்பு ஆகிவிடாது. இதே போல் இன்று பழைய கலை வடிவங்கள் யூடியுபிலும், கிண்டிலிலும் வரலாம். ஆனால் கணினி இணைய கால கலை வடிவங்களே, இனிவரும் காலங்களில் முதன்மை பெரும் அனைத்து மக்களுக்கான கலைவடிவமாக மாறும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை இந்த அட்டவணையில் பார்க்கலாம்.

காலவாதியான பின் நவீனத்துவம்
குப்பை இலக்கியம், சக்கை இலக்கியம், மக்கள் இலக்கியம்
பிறழிலக்கியம்

இதை பார்த்து உங்களுக்கு கோபம் வந்தால் அது இயல்பானதே. ஏன் இயல்பானது என்று அறிய பிடிக்காத செய்தியை மனிதர்கள் எதிர்கொள்ளும் ஏழு நிலைகள் – The Kübler-Ross Grief Cycle என்ற கட்டுரையை நீங்கள் அவசியம் வாசிக்கவும்.

இதில், பாலச்சந்தர் தான் சூப்பர் ஸ்டார். நாடகம் போட்டார். திரைக்கு வந்தார். திரைக்கு வந்த போது நாடகங்களையே திரையில் எடுத்தார். பிறகு 1980களில் திரைப்படங்கள் எடுத்தார். 1980களில் தொலைக்காட்சி வந்த போது ஆரம்பங்களில் திரைக்கதைகளேயே தொலைக்காட்சி தொடராக எடுத்தார் பிறகு தொலைக்காட்சிக்கான புது வடிவிற்கு 1990களில் மாறினார்

அதே போல் காலம் மாற மாற கலைவடிவங்களும் மாறும். அதற்கு ஏற்ப மாறும் கலைஞர்கள் இயல்பாக வெற்றி பெருவார்கள்.  காலமாற்றத்தை உணராதவர்கள் புலம்பிக்கொண்டே தனக்கு தானே ரசிகர் கடிதம் எழுதிக்கொண்டே இருக்க வேண்டியது தான்